Srivilliputhur Andal Therottam 2025 
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ”ஆடிப்பூர தேரோட்டம்” : பக்தர்கள் பரவசம்

Srivilliputhur Andal Therottam 2025 : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூரத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Kannan

ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் :

Srivilliputhur Andal Therottam 2025 : தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலும் ஒன்று, 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த இங்கு ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. ‘கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்துச் சென்றனர்.

ஆடிப்பூரத் தேரோட்டம் :

கொடியேற்றத்துடன் கடந்த 2-ம் தேதி விழா தொடங்கிய நிலையில், நாள்தோறும் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று காலை இருவரும் சர்வ அலங்காரத்துடன் ஆடிப்பூரத் தேரில் எழுந்தருளினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் கோயில் கள்ளழகர் பெருமாள் சீர்வரிசையாக அனுப்பி வைத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் படிக்க : ஆடி அமாவாசை : புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் :

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு சதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர். ரங்கா, கோபாலா என்ற முழக்கங்கள் விண்ணை பிளந்தன. பல்லாயிரக் கணக்கானோர் குவிந்ததால், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

=====