தமிழக சட்டசபை தேர்தல் :
Supreme Court on DMK OTP Issue Case : தமிழக சட்டசபை இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளை பல்வேறு வழிகளில் மக்களை சந்திக்கும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. விஜய்யின் வருகை ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான திமுக, கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மக்களை சந்தித்து ஆதரவை பெறுவதில் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுமக்களிடம் ஓடிபி பெறும் திமுக :
அந்த வகையில், 'ஓரணியில் தமிழகம்' என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்த திமுகவினர், பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓடிபி எனப்படும் ஒருமுறை கடவுச் சொல்லை பெற்று வந்தனர். இதற்காக திமுகவினர் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் இருப்பவர்களிடம் ஆவணங்களை கேட்டனர்.
பொதுமக்களிடம் திமுகவினர் கெடுபிடி :
வீடுகளில் முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஓட்டினர். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளையும் கேட்டு பெற்றனர்.
ஓடிபி எண் - உயர்நீதின்றம் இடைக்கால தடை :
திமுகவினரின் இந்த அத்துமீறலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக ஒருவரின் அனுமதியில்லாமல் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது குற்றச்செயலாகும். எனவே, பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விவரங்களை திமுகவினர் சேகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுகவினர் ஓடிபி எண்ணை பெற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் படிக்க : ஸ்டாலின் ஆட்சியில் எங்கும் ஊழல் : எடப்பாடி கடும் விமர்சனம்
திமுக முறையீட்டு மனு தள்ளுபடி :
இதை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ''உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
======