kalaignar statue costவள்ளியூரில் கருணாநிதிக்கு சிலை :
Supreme Court on Kalaignar Karunanidhi Statue : நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவாயில் அருகே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க, பேரூராட்சி நிர்வாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி சட்டசபை உறுப்பினர் நிதியின் கீழ், சிலையை நிறுவுவதற்கான ஒப்புதலையும் அரசிடம் இருந்து பேரூராட்சி பெற்றது
சிலை அமைக்க உயர் நீதிமன்றம் தடை :
மக்களின் வரிப்பணத்தை கொண்டு, சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது(HC on Kalaignar Statue). இதை விசாரித்த நீதிமன்றம், சிலையை நிறுவ அனுமதி மறுத்ததோடு, பொது இடங்களில் இடையூறாக இருக்கும் சிலைகளை அகற்றவும் உத்தரவும் பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்முறையீடு :
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு(Karunanidhi Statue Case) செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மக்கள் வரிப்பணம் பயன்படுத்த எதிர்ப்பு :
மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு தலைவரின் புகழை பரப்புவதற்காக மக்கள் பணத்தை பயன்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி சிலைகள் அமைக்கக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பான மனுவை திரும்ப பெற அனுமதியளிக்க வேண்டும் என்றும் சிலை நிறுவ அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க : திட்டங்களுக்கு தந்தையின் பெயர் : முதல்வர் மீது அண்ணாமலை காட்டம்
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் :
இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
=======
.