திட்டங்களுக்கு தந்தையின் பெயர் : முதல்வர் மீது அண்ணாமலை காட்டம்

Annamalai on TN Govt Scheme Names : மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு எல்லாம், தனது தந்தையின் பெயரை வைக்க ஸ்டாலின் முனைப்பு காட்டுவதாக, அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
Annamalai Accused CM MK Stalin On TN Govt Scheme Named Kalaignar
Annamalai Accused CM MK Stalin On TN Govt Scheme Named Kalaignar
1 min read

விடுதலை வீரர் காளியண்ணன் :

Annamalai on TN Govt Scheme Names : தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ சுதந்திரப் போராட்டத் தியாகி காளியண்ணன், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், தமிழகத்தின் முதல் சட்டசபை உறுப்பினராகவும், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், காமராஜர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும் ஆவார். தமது பொதுவாழ்வில், தமிழகம் முழுவதும் பல நூறு அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அமையவும் காரணமாக இருந்தவர்.

வாழ்வில் ஒளியேற்றய காளியண்ணன் :

தமது சொந்த நிலங்களை, ஏழை, எளிய மக்களுக்குத் தானமாக வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் முன்னேற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர். இத்தனை சிறப்புக்குரிய காளியண்ணன் பெயரை(Kaliyannan), நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி(Namakkal Government Hospital) மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகிறது.

தந்தை பெயருக்கு முக்கியத்துவம் :

நலத்திட்டங்களுக்கெல்லாம், தனது தந்தையின் பெயரை(Kalaignar Karunanidhi) வைக்க முனைப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த காளியண்ணன் பெயரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வைக்க ஏன் மறுக்கிறார்? ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையே அங்குள்ள பஸ் நிலையம், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களுக்கு வைக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் திமுக எப்போதுமே, தலைவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறது.

பொதுமக்களை திரட்டி போராட்டம் :

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு(Namakkal Medical College Hospital), காளியண்ணன் பெயரை வைப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக முடிவெடுக்கவில்லை என்றால், பொது மக்களைத் திரட்டி, உண்ணாவிரதம் உள்ளிட்ட கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தவிருப்பதாக, பல்வேறு அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. எனவே, மக்களின் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் செவி சாய்க்க வேண்டும்” இவ்வாறு அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in