வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் :
Gold & Silver Price Increased Today in Chennai : இந்தியா மீது அமெரிக்கா விதித்து இருக்கும் 50 சதவீத வரியின் தாக்கம் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக இந்தியா ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இதன் காரணமாக வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.
10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம் :
கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை(One Sovereign Gold Price Today) செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலம் இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் விலை எட்டி இருக்கிறது.
ரூ.78,000 நெருங்கும் தங்கம் :
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.390ம், சவரனுக்கு ரூ.3,120ம் உயர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இதேநிலை நீடித்தால் தங்கம் ஒரு பவுன் ரூ.78,000 என்பதை தொட்டுவிடும்.
5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் :
27.08.2025 - ஒரு சவரன் - ரூ.75,120
28.08.2025 - ஒரு சவரன் - ரூ.75,240
29.08.2025 - ஒரு சவரன் - ரூ.76,280
30.08.2025 - ஒரு சவரன் - ரூ.76,960
31.08.2025 - ஒரு சவரன் - ரூ.76,960
வெள்ளி விலையும் புதிய உச்சம் :
வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று ஒரு கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 136 ரூபாய்க்கும்(Silver Price Today), கிலோவுக்கு 2000 ரூபாய் உயர்ந்து 1,36,000 ரூபாயாக உள்ளது.
மேலும் படிக்க : Gold Rate: ரூ.76,000ஐ நெருங்கும் தங்கம்: மீண்டும் உச்சம் தொடுகிறது
பிளாட்டினம் விலை 10 கிராம் எவ்விதமான விலை மாற்றமுமின்றி 38,690 ரூபாயாக உள்ளது.
=========