Gold Rate: ரூ.76,000ஐ நெருங்கும் தங்கம்: மீண்டும் உச்சம் தொடுகிறது

Gold Rate Today in Chennai : தங்கத்தின் விலை சவரன் 76 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது.
Gold Rate Today in Chennai
Gold Rate Today in Chennai
1 min read

தங்கம், வெள்ளி விலை :

Gold Rate Today in Chennai : சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தங்கம், வெள்ளியின் விலை ஏற்றம் காண்போதோ அல்லது குறைவதோ என இருக்கிறது. கடந்த வாரம் சரிவை சந்தித்த தங்கம் விலை, முகூர்த்த நாட்கள் தொடங்கி விட்டதால் படிப்படியாக ஏற்றம் கண்டு அச்சுறுத்தி வருகிறது.

76,000 நெருங்கும் தங்கம் :

அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.75,760 ஆக உயர்ந்துள்ளது. 76 ஆயிரம் ரூபாயை தங்கம் விலை நெருங்குவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிராமுக்கு ரூ,65 அதிகரித்து ரூ.9,470க்கு விற்பனையாகி வருகிறது.

4 நாட்களில் சவரனுக்கு ரூ.1,320க்கு உயர்வு :

கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. அதன்படி விலை நிலவரங்களை(Gold Price Update) பார்க்கலாம்.

29-08-2025 - ( இன்று ) ரூ.75,760

28-08-2025 - ரூ.75,240

27-08-2025- ரூ.75,120

26-08-2025- ரூ.74,840

25-08-2025- ரூ. 74,440

வெள்ளி விலையும் அதிகரிப்பு :

வெள்ளி விலையு(Silver Rate)ம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று ஒரு ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.131 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 31,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க : Hallmark முத்திரையுடன் ’9K GOLD’ : விலை குறைவு, மக்கள் வரவேற்பு

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in