Thirumavalavan raised questions about Tamil Nadu government's hesitation,fear in filing a case against Vijay 
தமிழ்நாடு

’விஜய் மீது வழக்கு போட ஏன் அச்சம்?’: திமுக அரசுக்கு திருமா கேள்வி

Thirumavalavan About TVK Vijay Karur Incident : விஜய் மீது வழக்கு தொடுக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? என்று திருமாவளவன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Kannan

Thirumavalavan About TVK Vijay Karur Incident : கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசாரத்தின் போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

போலீசார் மெத்தனமாக இருக்கிறார்கள்

இந்தநிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்(VCK Leader Thirumavalavan), “ கரூர் சம்பவத்தில் தமிழக போலீசார் காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது.

விஜய் மீது வழக்கு தொடர பயமா?

அந்த முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை? தமிழக அரசு அச்சப்படுகிறதா? தமிழக காவல்துறை அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு போடுவதில்லை, இளைத்தவர்கள் மீது தான் வழக்குப்பதிவு போடுவது என்கிற நடைமுறையை கையாள்கிறதா?.

காவல்துறை அணுகுமுறை சரியில்லை

15, 20 வருடங்களுக்கு முன், நான் நயினார் பாளையம் என்ற இடத்தில் நான் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். புதுச்சேரி அருகில் ஒரு சம்பவம் நடக்கிறது. அன்றைக்கு விழுப்புரம் எஸ்பியாக இருந்த ரவி என் மீது வழக்கு போட்டார்.எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு தெரியாத ஒரு நிகழ்வு.

கட்சிக்காரர்கள் ஏதோ ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உடன் சம்மந்தமே இல்லாத என் மீது பல வழக்குகளை எந்த தொடர்பும் இல்லாத நிலையில் போடப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்.

மேலும் படிக்க : பாஜக பிடியில் விஜய் இருக்கிறாரா? நச் பதிலளித்த நயினார் நாகேந்திரன்

சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம்

எல்லோரும் சமம் என்று பார்க்கிற போது அந்த கட்சியில் சம்மந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள், அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்பிற்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள், கால தாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம், இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

================