பாஜக பிடியில் விஜய் இருக்கிறாரா? நச் பதிலளித்த நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran on TVK Vijay Karur Issue : காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் பிடியில் விஜயா? என செய்தியாளர்களுக்கு சுவாரசிய பதிலளித்துள்ளார்.
BJP Leader Nainar Nagendran on TVK Vijay Karur Stampede Issue in Tamil
BJP Leader Nainar Nagendran on TVK Vijay Karur Stampede Issue in Tamil
1 min read

நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி :

Nainar Nagendran on TVK Vijay Karur Issue : காந்தி சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது மின் தடையை ஏற்படுத்தியது யார்? கூட்டத்தின் நடுவே செருப்பை வீசியது யார்? இந்த சம்பவத்தின்போது போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? என்று் கேள்விகளை எழுப்பினார்.

தடியடி நடத்தியது எதற்காக?

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை? எதற்காக பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்? கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

சீர்தூக்கி பார்க்க வேண்டும்

இதைத்தொடர்ந்து பேசிய அவர், முதல்-அமைச்சர் வரும்போது மட்டும் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள், இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று விமர்சித்தார். பின்னர். தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது தவறு.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் இதில், வேலியே பயிரை மேய்வது போல திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இரு காவலர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் படிக்க : ”செந்தில் பாலாஜியின் பதற்றம்” : சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை

விஜய் குறித்து விளக்கம்

முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது என்று குற்றம் சாட்டினார். பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? பல தரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து பதிலளித்தார். அவரின் இத்தகைய கருத்திற்கு பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில்(Nainar Nagendran About Vijay) பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in