திருச்செந்தூர் கோவில் :
Tiruchendur Soorasamharam 2025 Date And Time in Tamil : புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து, இறைவனை வழிபட்டு செல்கிறார்கள். திருவிழா நாட்கள் என்றால் இந்தக் கூட்டம் பல மடங்கு பெருகும். அந்த வகையில், திருச்செந்தூரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சூரசம்ஹாரம்.
கந்த சஷ்டி விழா :
கந்த சஷ்டி விரதத்தின்(Skanda Sashti Viratham 2025) உச்சகட்ட நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும். முருகப்பெருமான், சூரபத்மன் மற்றும் பிற அசுரர்களை வதம் செய்து, உலக நன்மைக்காக இந்த போரை நிகழ்த்திய புராணக் கதையை நினைவு கூரும் வகையில், இது நடத்தப்படுகிறது. இது "சூரன்போரு" என்றும் அழைக்கப்படுகிறது.
முருகனின் வீரம், பக்தர்கள் பரவசம்
கந்த சஷ்டி விரதம் ஒரு வாரம் நடத்தப்படும் விழாவாகும், புராண நிகழ்வின் மறு உருவாக்கமாக நடைபெறும் சூரசம்ஹாரத்தை, பொதுமக்கள் கண்டு ரசித்து, முருகப்பெருமானின் வீரத்தை கண்டும் வியந்தும், வழிபடுவது இறைநிலையின் உச்சமாக இருக்கும்.
அசுரர்களை வதம் செய்யும் முருகன் :
சூரசம்ஹாரம் கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாள் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். முருகப் பெருமானின் வீரம், தீமையை அழிக்கும் தத்துவத்தை குறிப்பதாகும். திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் அசுரர்கள் வதம் செய்யப்படும் காட்சி, முருகப்பெருமான் சிங்காரவேலனாக அன்னையிடம் வேல் பெற்று போரிடும் காட்சியாக சித்தரிப்பு, இன்றும் அதை நேரடியாக பார்ப்பதை போன்ற பரவசத்தை தரும்.
27ம் தேதி சூரசம்ஹார விழா :
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வரும் 22ம் தேதி யாகசாபை பூஜையுடன் தொடங்குகிறது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் 27ம் தேதி மாலை(Tiruchendur Soorasamharam 2025 Date And Time) நடைபெறுகிறது. இந்த விழாவில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : அக். 22ம் தேதி சபரிமலை ஐயப்பனை தரிசிக்கிறார் ஜனாதிபதி முர்மு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. பக்தர்களின் அடிப்படை தேவைகளை குறைவின்றி நிறைவேற்றும் வகையில், அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் முடுக்கி விட்டு இருக்கிறது.
==========