அக். 22ம் தேதி சபரிமலை ஐயப்பனை தரிசிக்கிறார் ஜனாதிபதி முர்மு

President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple in Kerala : ஐயப்பனை தரிசிக்க வரும் 22ம் தேதி சபரிமலை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple in Kerala on October 22 2025
President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple in Kerala on October 22 2025
1 min read

சபரிமலை ஐயப்பன் கோவில் :

President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple in Kerala : உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின் போது கூட்டம் அலைமோதும். ஐயப்பனை தரிசிக்க சில சமயம் 36 மணி நேரம் கூட பிடிக்கும். மாதம் தோறும் கோவில் நடை திறக்கும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஐயப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலை வருகிறார் துணை ஜனாதிபதி :

இந்தநிலையில், சபரிமலை ஐயப்​பன் கோவில் நடை வரும் 18ம் தேதி துலாம் மாத ( ஐப்பசி ) பிறப்பை முன்​னிட்டு 17ம் தேதி மாலை திறக்​கப்படுகிறது. அந்த சமயம் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு வருகிறார். 22ம் தேதி அவர் சபரிமலை வர இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. .

ஐப்​பசி மாத வழி​பாட்​டில் குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு(Droupadi Murmu Ayyappa Darshan) கலந்​து​கொண்டு ஐயப்​பனை தரிசிக்க உள்​ளார். இவர் ஏற்​கெனவே மே மாதம் சபரிமலைக்கு வரு​வ​தாக இருந்த நிலை​யில், பம்​பை, சந்​நி​தானம் உள்​ளிட்ட பகு​தி​கள் ராணுவ கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டன. ஆனால் அப்​போது நடை​பெற்ற இந்​தி​ய-​பாகிஸ்​தான் போர்​சூழலால் அவர் வர முடி​யாத நிலை ஏற்பட்டது.

நீலிமலை பாதையில் நடந்து செல்கிறார்

இந்தநிலையில், 22ம் தேதி கொச்சி விமான நிலையம் வந்தடையும் அவர், அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் நிலக்​கல் வரு​கிறார். பின்னர் கார் மூலம் பம்பை வந்து அங்கிருந்து நீலிமலை பாதை வழியே நடந்து செல்ல உள்​ளார்(Droupadi Murmu Visit Ayyappa Temple Date). இருப்​பினும் மாற்று ஏற்​பா​டாக வாக​னம் மூலம் சந்​நி​தானம் செல்லவும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும் படிக்க : சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு

பக்தர்கள் இடையே குழப்பம்

பாது​காப்பு கருதி அவர் வருகை குறித்த முழு விவர​ம் எதையும் தேவசம் போர்டுக்கு வெளியிடவில்லை. குடியரசு தலைவர் வரும் நாளில் பாது​காப்பு காரணங்​களுக்​காக பக்​தர்​களின் வருகையை கட்​டுப்​படுத்த திட்டமிடப்பட்​டுள்​ளது. எனவே, தரிசன முன்​ப​திவுகளை மேற்​கொள்​வ​தில் பக்​தர்​களிடையே குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in