TN Assembly Session 2025 CM MK Stalin stated That Edappadi Palaniswami Taking Karur Stampede Death Incident for AIADMK TVK Alliance News in Tamil 
தமிழ்நாடு

கூட்டணிக்கு ஆள் தேடுகிறார் எடப்பாடி : முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

CM MK Stalin Criticize EPS on ADMK TVK Alliance : கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஆள் தேடுவதாக முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Kannan

சட்டமன்றத்தில் கரூர் சம்பவம்

CM MK Stalin Criticize EPS on ADMK TVK Alliance : கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், கரூர் பிரச்சினையை கிளப்பினர்.

கூட்டணிக்கு ஆள் தேடுகிறார் எடப்பாடி

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும், கரூர் சம்பவத்தில் பொத்தம் பொதுவாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார். இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஆள் தேடுகிறார் என்று தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.

விஜய் தாமதமே நெரிசலுக்கு காரணம்

கரூர் கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று முதல்வர் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சி சம்பவத்தையும், கரூர் கூட்ட நெரிசலையும் ஒப்பிட்டு பேசக் கூடாது. உள்நோக்கத்துடன் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பியதால் தான், அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.

சரியாக செயல்பட்ட தமிழக அரசு

தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை சட்டப்படி விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண உதவி அனைத்தும் சரியான முறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற அடிப்படையில் அரசு செயல்படும்

உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும் என்பதை உறுதியோடு சொல்கிறேன். இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும் பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க : Karur : அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது? எடப்பாடி பழனிசாமி

மக்களின் உயிர் மிக முக்கியம்

அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிர் விலைமதிப்பற்றது. இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

=============