கரூர் பிரச்சார கூட்டம் :
Karur Stampede Death in TVK Vijay Campaign Rally : தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டம் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக திருச்சியில் தொடங்கிய பரப்புரை, கரூர் பிரச்சார கூட்டம் வரை தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கரூரில் நடைபெற விருந்த பிரச்சார கூட்ட இடத்திற்கு பல வித எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு முன் தேர்வு செய்த இடம் நிராகரிக்கப்பட்டது. பிறகு கரூரிலே பிரச்சார கூட்டம் வேறொரு இடத்தில் நிர்ணயிக்கப்பட்டு, நேற்று 27 ஆம் தேி நடைபெற்றது.
விஜயின் நிவாரணம் :
விஜயின் பிர்சசார உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததை அடுத்து(Karur Death Toll), இதற்கு அரசியல் கட்சி தலைவர் மற்றும் பலர் வருத்தம் தெரிவித்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தனது வருத்தத்தை சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம்(Vijay Relief To Karur Stampede Death) வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
தவெக தலைவர் விஜயின் எக்ஸ் பதிவு :
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே. நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் :
இதைத்தொடர்ந்து தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அவர், அடுத்து வாரம் இருந்த பிரச்சார கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த இழப்பிற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தாலும், இவரின் அடுத்தைய பிரச்சார கூட்டம் தொடருமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : Karur : கரூரில் நடந்த துயரம்..! உண்மையில் பலி எண்ணிக்கை எத்தனை?
தவெக பொதுசெயலாளர்கள் மீது வழக்குப்பதிவு
குறிப்பாக இச்சம்பவத்தில் தமிழக வெற்றி கழக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த்(Karur Stampede Case on Bussy Anand) மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.