TVK Leaver Vijay Tweet About DMK Government Job Scam for Cash in MAWS Department Of ED Letter TVK Vijay X Page
தமிழ்நாடு

Vijay: பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் அரசு பதவியா? தவெக பதிவு!

TVK Vijay on DMK : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை, காவல்துறைக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து தவெக தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

Bala Murugan

அமலாக்கத்துறையின் கடிதம்

TVK Vijay on Tamil Nadu Govt Job Scam : இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) திங்கள் கிழமையன்று தமிழ்நாடு காவல்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உள்ள 2,538 பதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதில் ‘வேலைக்குக் காசு’ என்ற அடிப்படையில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பதவிகளுக்கான நியமன ஆணைகளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிலையில், தற்போது இந்த கடிதத்தை அமலாக்கத்துறை காவல்துறைக்கு அனுப்பியுள்ள நிலையில், இந்த முறைகேடு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

முறைகேடிற்கு கே.என். நேரு பதில்

இரண்டு லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இறுதியாக 2,538 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்துள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம்

திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன.திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார் என்று தெரிவித்தார். இவரைப்போல், தனது கண்டனங்களை அறிக்கையின் மூலம் வெளிப்படுத்திய அன்புமணி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது உள்ளிட்ட பல விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் படிக்க : ’கோடிகளில்’ திமுக அரசின் ஊழல் - காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்

தவெக எக்ஸ் பதிவு

இவர்களை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம், இதுகுறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, அதில் அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் மாபெரும் ஊழல் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பணியாளர்கள் தேர்வில் 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கப்பட்டது என்று அமலாக்கத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு பதவி கனவை இப்படி corruption model ஆட்சியினால் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார் MK Stalin என்றும் படித்தவர்கள் யாரும் உயர்ந்திடக் கூடாது, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அரசு பதவி என்பது தான் உங்கள் நிலைப்பாடா என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தவெக தொண்டர்கள் ரீடுவீட் செய்து கமென்ட் செய்து வருகின்றனர்.