கரூர் துயரம் - 39 பேர் பலி :
Karur Stampede Death Case : கரூரில் நடிகர் விஜய் நேற்றிரவு பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 39 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த துயரம், விஜய் மீது விமர்சனங்களை முன்வைக்க காரணமாகி இருக்கிறது.
சதி இருப்பதாக தவெக சந்தேகம் :
இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக தவெக நிர்வாகிகள் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால், தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.
சிபிஐ விசாரணை அவசியம் :
வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான தவெக குழுவினர் இந்த முறையீட்டை தாக்கல் செய்தனர். சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தவெக கோரியுள்ளது. நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும், இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று அவர்கள் முறையிட்டனர். கரூரில் போலீசார் தடியடி நடத்தியதாகவும்,, கூட்டத்தை நோக்கி கற்களை வீசப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் படிக்க : Karur : கரூரில் நடந்த துயரம்..! உண்மையில் பலி எண்ணிக்கை எத்தனை?
நாளை விசாரணை :
இந்த முறையீடு மீது, நாளை 29ம் தேதி மதுரை அமர்வில் மதியம் 2:15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகிய 2 நபர்கள் கொண்ட அமர்வில் தவெக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது
===============