தமிழ் சினிமா, உச்சம் தொட்ட விஜய்
TVK Vijay Election Campaign Tour Date in Trichy : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய அவர், கொடியை அறிமுகப்படுத்தி, விழுப்புரம் அருகே முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினார்.
தீவிர அரசியலில் விஜய் :
அதைத் தொடர்ந்து, கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்திய அவர், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மூலம் அரசியலை முன்னெடுத்தார்.
போராட்ட களத்தில் விஜய் :
விஜய் பனையூரில் மட்டுமே அரசியல் செய்கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்ட களத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதை உடைக்கும் விதமாக காவல்நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், மதுரையில் கடந்த மாதம் 2வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.
திருச்சியில் இருந்து சுற்றுப் பயணம் :
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருப்பதால் சுற்றுப் பயணம் மூலம் மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதன்படி வரும் 13ம் தேதி(TVK Vijay Election Campaign Tour Date in Trichy) திருச்சியில் அவர் பிரசாரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுத்த காவல்துறை, பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
23 நிபந்தனைகளுடன் அனுமதி
அதன்படி, திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ரோடு ஷோ நடத்தக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவு வாகனங்களை சாலையில் நிறுத்தக் கூடாது, விஜய் பிரசார வாகனத்திற்கு முன்பும் பின்பும் அதிக அளவில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்லக் கூடாது, போலீசாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுநிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்பட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
13ம் தேதி திருச்சியில் பிரசாரம்
இவற்றை ஏற்பதாக தவெக நிர்வாகிகள் எழுத்துப் பூர்வமாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து திருச்சியில் வரும் 13ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்(TVK Vijay Campaign in Trichy). வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அவர் மக்களை சந்திக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : ’சிரஞ்சீவி’ நிலைதான் ’விஜய்’க்கும் : அடித்துச் சொல்லும் வேலுமணி
திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜய்
ஆளும் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வரும் விஜய், தனது பிரசாரத்தின் மூலம் தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைப்பார் எனத் தெரிகிறது. இது அவரது தேர்தல் வெற்றிக்கு எந்த அளவு கைகொடுக்கும் என்பது, சட்டமன்ற தேர்தல் மூலம் தான் பதில் கிடைக்கும்.
=============