விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ : இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்

TVK Vijay 2nd Madurai Manadu Selfie Video in Instagram : தவெக மாநாட்டில் விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
TVK Vijay 2nd Madurai Manadu Selfie with Fans Video Record in Instagram
TVK Vijay 2nd Madurai Manadu Selfie with Fans Video Record in Instagram
1 min read

தவெக மாநில மாநாடு :

TVK Vijay 2nd Madurai Manadu Selfie Video in Instagram : மதுரையில் கடந்த 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் மூன்றரை லட்சம் பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது. மாநாட்டு திடலில் இருந்து, மாநாட்டுக்கு முன்பும்,பின்பும் எடுத்த வீடியோ பதிவுகளை பலரும் எடுத்து வெளியிட்டு வந்தார்கள். அந்தளவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

தொண்டர்கள் உற்சாகம் :

மாநாட்டு திடலுக்கு வந்த விஜய், அங்கிருந்த நடைபாதையில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். ஆர்வ மிகுதியால் தடுப்புகள் மீது ஏறிய பலர், அவரோடு கை குலுக்கியும், சால்வை கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினர்.

சமூக வலைதளத்தில் செல்ஃபி பதிவு :

அப்போது தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்தார் நடிகர் விஜய்(TVK Vijay Selfie Video). இதனை அடுத்தநாள் 22ம் தேதி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார் விஜய். இந்தப் பதிவு மாபெரும் சாதனையை எட்டியிருக்கிறது.

இன்ஸ்டாவில் 100 மில்லியன் பார்வையாளர்கள் :

விஜய்யின் செல்ஃபி வீடியோ இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பார்வைகளை(Vijay Selfie Video Views in Instagram) கடந்திருக்கிறது. மேலும் 10 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் அரசியல் சார்ந்த பதிவொன்றுக்கு இவ்வளவு பார்வைகளும், லைக்குகளும் பெற்றிருப்பது விஜய்யின் பதிவுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ”விமர்சிப்பதில் நாகரீகம் வேண்டும்” : விஜய்க்கு சரத்குமார் பாடம்

மேலும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் பதிவுக்கு இந்தளவுக்கு வரவேற்பு பெற்றிருப்பதும் விஜய்யின் பதிவுக்கு தான் என்பதும் நினைவுக் கூரத்தக்கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in