TVK Vijay Latest Speech About TN Assembly Election 2026 in My TVK App Launch Event in Panaiyur 
தமிழ்நாடு

1967, 1977 போல 2026 தேர்தலில் திருப்புமுனை: அடித்து சொல்லும் விஜய்

TVK Vijay Speech About TN Election 2026 : தமிழக அரசியலில் 1967, 1977ல் நடந்த மிகப்பெரிய மாற்றங்களை போல, 2026 தேர்தலும் திருப்பு முனையாக இருக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

தவெக செயலி ’மை டிவிகே’ அறிமுகம் :

TVK Vijay Speech About TN Election 2026 : சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற விஜய், ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு'' என்ற செயலியை வெளியிட்டு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

தமிழக அரசியலில் மாற்றம் நிச்சயம் :

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான மொபைல் ஆப்-ஐ வெளியிட்ட விஜய்(Vijay Launch My TVK App), கட்சி நிர்வாகிகள் இடையே பேசுகையில், “ எல்லோருக்கும் வணக்கம், இதற்கு முன்பு நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 ஆகும். அதே மாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம், முதலில் இருந்தே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

அதிகார பலத்தை ஜெயிக்க முடியும் :

இந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில், ஏற்கனவே வெற்றி பெற்று கொண்டு இருந்தவர்களின் அதிகார பலம், அசுர பலம் எல்லாவற்றையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்து காண்பித்தார்கள். எப்படி ஜெயித்தார்கள் என்று பார்க்கும் போது, அது சிம்பிள் லாஜிக். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்று எல்லா மக்களை சந்தித்து இருக்கிறார்கள். இதன் மூலம் வெற்றி வசமானது.

அண்ணா வழியில் பயணிப்போம் :

அண்ணாதுரை சொன்னதை நானும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ். மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, இதனை சரியாக செய்தால் போதும், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வெற்றி பேரணியில் தமிழ்நாடு(TVK Campaign) என்ற அடிப்படையில் எல்லா குடும்பத்தினரையும் உறுப்பினராக சேர்த்து, நம்ம கண்டிப்பாக ஜெயிக்க முடியும். அதனால் தான் இந்த My TVK App ஆப்-ஐ அறிமுகப்படுத்துவதில் ரொம்ப சந்தோஷம் படுகிறேன்.

மக்களோடு மக்களாக இருப்போம் :

இதற்கு பிறகு தவெக 2வது மதுரை மாநாடு(Vijay 2nd Maanadu), மக்கள் சந்திப்பு, பயணம் என்று தொடர்ந்து மக்களுடன் மக்களாக தான் இருக்க போகிறோம். இதனால், இப்பொழுது இருந்தே அதற்கான வேலையை தொடங்க வேண்டும். நாம் இருக்கிறோம், நமது உடன் மக்கள் இருக்கிறார்கள், இதுக்கு மேல என்ன வேணும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும்,வெற்றி நிச்சயம். நன்றி” இவ்வாறு விஜய் பேசினார்.

=====