
தமிழக வெற்றிக் கழக மாநாடு :
TVK Vijay 2nd Manadu in Madurai Update : தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், விழுப்புரம் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி காட்டினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் என தீவிர அரசியலை விஜய் முன்னெடுத்து வருகிறார்.
முதல்வர் வேட்பாளர் விஜய் :
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக வரிந்து கட்டி களம் காண்கிறது தமிழக வெற்றிக் கழகம்(TVK), பாஜக இடம் பெறும் கூட்டணி எங்களுக்கு வேண்டாம், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்ற முழக்கத்துடன், அரசியலில் வலம் வருகிறது தமிழக வெற்றிக் கழகம்.
ஆகஸ்டு 25ல் மதுரை மாநாடு :
இந்தச் சூழலில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு(TVK Second Manadu Date) ஆகஸ்டு 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளும் ஆகஸ்டு 25தான். அவர் பிறந்த ஊரான மதுரையில் தனது செல்வாக்கை காட்ட மாநாடு நடத்துகிறார் விஜய்(TVK Vijay).
மேலும் படிக்க : மதுரையில் 2வது மாநில மாநாடு : ’வெற்றி நிச்சயம்’ என விஜய் சூளுரை
500 ஏக்கரில் மாநாட்டு பந்தல் :
மதுரை பெருங்குடி அருகே பாறைப்பத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர்(TVK Madurai Manadu Location) நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல், மேடை அமைக்கப்படுகிறது. ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு, மாநாடு நடைபெறும் இடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
பிரமாண்டமாக அமையும் மாநாட்டு பந்தல் :
பந்தல் அமைக்க தேவைப்படும் ராட்சத குழாய்கள், இரும்பு தடுப்புகள், தகர ஷீட்கள், லாரிகள் மூலம் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை பாதுகாப்புடன் இறக்கி வைத்து விட்டு, பணிகளை தொடங்க உள்ளனர் தொழிலாளர்கள். அடுத்த வாரம் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கி விடும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு மாநாட்டு பணிகளை(TVK 2nd Manadu Status) ஒருங்கிணைக்க உள்ளனர்.
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மாநாட்டு மேடை :
இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில், மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்ட விஜய் முனைப்பு காட்டி வருகிறார். மாநாட்டு மேடை டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. மேலும் 10 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் மிகப் பிரமாண்டமாக மாநாடு பந்தல்(TVK 2nd Madurai Manadu Seating Capacity) அமைகிறது. இதற்காக 10 லட்சம் நாற்காலிகள் வரவழைக்கப்பட உள்ளன. முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொண்டர்களுக்கு அறுசுவை உணவு :
மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு(TVK 2nd Manadu Food) வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மதுரையில் மாநாட்டை நடத்திய போது, பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதை முறியடிக்கும் வகையில் விஜய் மாநாடு(Vijay Maanadu) அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
=====