ஆசிரியர் தினம் :
TVK Vijay on Teachers Day 2025 : முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆசிரியர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களை வாழ்த்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சமத்துவத்தை பரப்பும் ஆசிரியர்கள் :
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில்(TVK Vijay Tweet), ”அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள், அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள். அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்.
மேலும் படிக்க : இளையராஜாவுக்கு பாராட்டு விழா : ரஜினி பங்கேற்கிறார், விஜய்?
காமராஜர் வழியில் ஆசிரியர்கள் :
இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள். ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில்(TVK Vijay Wishes Teachers Day 2025) தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக :
ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் விஜய்(TVK Vijay) கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
===========