Vetri Magalir Entrepreneurship Scheme source:google
தமிழ்நாடு

தொழில் தொடங்க 5 கோடி வரை கடன் 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்': வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழக அரசின் வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

Kavitha prasanna

Vetri Magalir Entrepreneurship Scheme: Guidelines Released by Tamil Nadu Government

வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டை ஊக்கவிக்கும் வகையில் 'வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற நிதியுதவித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகத் தேர்வு

  • இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொகுதிக்கு 10 மகளிர் தொழில்முனைவோர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • அந்தந்தத் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் (TIIC) பரிசீலிக்கப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர்.

ரூ.5 கோடி வரை கடனுதவி மற்றும் பயன்பாடுகள்

  • இந்த நிதியுதவியைப் பயன்படுத்தி நிலம் வாங்குதல், கட்டிடம் கட்டுதல், புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட தொழில் சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

  • இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும்.

வட்டி விகிதம் மற்றும் திருப்பி செலுத்தும் அவகாசம்

  • கடனுக்கான வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 9.95 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது.

  • கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும்.

  • தொழில் தொடங்கும் ஆரம்பகட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இதில் 2 ஆண்டுகள் வரை தவணை ஒத்திவைப்பு காலமும் (Moratorium) அடங்கும்.

  • கடனை மாதாந்திர தவணை முறையில் திருப்பி செலுத்த வேண்டும்.

தகுதி வரம்புகள் மற்றும் பயிற்சி

இத்திட்டத்தில் பயனடையத் தனிநபரின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) 600-க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

மேலும், முதல்முறையாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சியும் அரசு சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை!

===========