மகளிர் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை!

மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்கான வெற்றிப் பயணம் திட்டத்திற்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Vetri Payanam Scheme Challenged in Madras High Court
Vetri Payanam Scheme Challenged in Madras High Courtsource: thamizhalai
1 min read

Vetri Payanam Scheme Challenged in Madras High Court

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று (05-10-2026) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

திட்டம் மற்றும் வழக்கின் பின்னணி

முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயணம் என்ற பெயரில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்ய வழிவகை செய்யும் இத்திட்டத்தை எதிர்த்து, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரரின் குற்றச்சாட்டுகளும் கோரிக்கைகளும்

மகளிருக்கான வெற்றிப் பயணம் திட்டம் காரணமாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்து, தொழிலைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகும் என்றும், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயல் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிப் பயணம் திட்டம் பயனாளிகளுக்கான கட்டணமாக ஆண்டுக்கு ரூ.6,000 கோடியை அரசே ஏற்றுக்கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கித் தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்

சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், இத்திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

இத்திட்டத்திற்கு எதிரான இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வருகிறது.

=========

logo
Thamizh Alai
www.thamizhalai.in