Vinayagar Chaturthi 2025 Celebration Date And Time in Tamil  
தமிழ்நாடு

"10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி" : எளிமையாக எப்படி கொண்டாடலாம்?

Vinayagar Chaturthi 2025 Celebration Date in Tamil : முழு முதற் கடவுளாம் விநாயகரை ஆவணி மாத சதுர்த்தி தொடங்கி 10 நாட்கள் எப்படி கொண்டாடுவது, அவரை மகிழ்ச்சியுடன் எப்படி வழியனுப்புவது என்பதை பார்க்கலாம்.

Kannan

தடைகளை தகர்க்கும் விநாயகர் :

Vinayagar Chaturthi 2025 Celebration Date in Tamil : விநாயகப் பெருமான் தடைகள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்கி, செல்வ வளம், ஞானம், மங்கலகரமான வாழ்வு ஆகியவற்றை தரக்கூடியவர். இவரை வழிபட்டால் நவகிரக தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. அல்லலை போக்கி நன்மையை கொடுப்பவர் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி :

விநாயகரை வழிபடுவதற்கு உரிய திதி சதுர்த்தி. அப்போது விரதம்(Vinayagar Chaturthi 2025 Viratham in Tamil) இருந்து விநாயகரை வழிபடுபவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாது என்பது நம்பிக்கை. விநாயகர் அவதரித்த ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாள் சில இடங்களில் 10 நாள் உற்சவமாக வழிபடப்படுவதற்கு என்ன காரணம், இந்த நாட்களில் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

முழுமுதற் கடவுள் கணேசர் :

இந்துக்களின் வழிபாட்டு முறையின்படி விநாயகப் பெருமானே முதன்மையான கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயகரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் அது வெற்றி நிச்சயம். தடைகளும் ஏற்படாது என்றது நம்பிக்கை. எனவே, எந்த புதிய வேலையை தொடங்குவதாக இருந்தாலும், விநாயகரை வழிபட்ட பிறகே துவங்குவது வழக்கம்.

27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் :

வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா(Vinayagar Chaturthi 2025 Date in Tamil ) கொண்டாடப்பட உள்ளது. வட இந்தியா உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சிலைகள்(Ganesha Idols Consecration) பிரதிஷ்டையில் தொடங்கி, கரைக்கும் வரை தினசரி பூஜைகள் நடத்தப்படும். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த வழக்கம் கிடையாது என்றாலும், எதற்காக இந்த 10 நாட்கள் கொண்டாட்டம்? இந்த 10 நாட்களும் விநாயகரை எப்படி வழிபட வேண்டும்(Ganesh Chaturthi 2025 10 Days Celebration) என தெரிந்து கொள்வோம்.

​* முதல் நாளில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் பிரதிஷ்டை செய்து, அவரை வீட்டிற்கு அழைக்க வேண்டும். அன்று முதல் விழா தொடங்கும்.

* இரண்டாம் நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி, அவரை மகிழ்விக்க வேண்டும். .

* மூன்றாம் நாள் விநாயகருக்கு சிறப்பு நைவேத்தியங்கள் படைத்து, ஆரத்தி காட்டி, சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும்.

* நான்காம் நாளில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அவருக்கு பஜனைகள் நடத்தி, மகிழ்விக்க வேண்டும். இனிப்புகள் மற்றும் நைவேத்தியங்கள் படைத்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

* ஐந்தாம் நாளில் விநாயகருக்கு ஷோடஷோபசர் பூஜை செய்யப்பட வேண்டும். இது விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின் மிக முக்கியமான நாளாகும்.

* ஆறாவது நாள் விநாயகருக்கு சிறப்பான பூஜைகள் செய்ய வேண்டும். இதை கணேச சஷ்டி என்று குறிப்பிடுவார்கள். வீட்டில் பிரதிஷ்டை செய்த விநாயகருக்கு தூப தீப ஆராதனை காட்டி, தான தர்மங்கள் செய்வது சிறப்பு.

* ஏழாம் நாளில், விநாயகருக்கு சப்தபதி பூஜைகள் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி அவரது அருளை பெற வேண்டும்.

* எட்டாம் நாள் அஷ்டமி திதி அன்று சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்து விநாயருக்கு விருப்பமான இனிப்புகளை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

* ஒன்பதாம் நாளில் நவபத்ரிகா பூஜை நடத்த வேண்டும். இது நவகிரகங்களுக்கான பூஜை. இதன் மூலம் நவக்கிரக தோஷம் இருந்தால் விநாயகர் விலக்கி விடுவார் என்பது நம்பிக்கை.

* 10வது நாள் உற்சவத்தின் கடைசி நாள். சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு, வீட்டில் இருந்து விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். இந்த ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி விழா 2025 : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்

இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை 10 நாட்கள் கொண்டாடுவதால், அவரது அருள் பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. விக்னங்களை உடைத்தெறியும் விக்னேஷ்வரன், நமக்கு எல்லா நன்மைகளையும் வழங்குவார் என்பதும் சிறப்பு

==========================