விநாயகர் சதுர்த்தி விழா 2025 : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்

Vinayaka Chaturthi 2025 at Vinayagar Temple in Pillayarpatti : விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.
Vinayaka Chaturthi 2025 Festival Celebration at Vinayagar Temple in Pillayarpatti
Vinayaka Chaturthi 2025 Festival Celebration at Vinayagar Temple in Pillayarpatti
2 min read

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு :

Vinayaka Chaturthi 2025 : சிவபெருமான் - பார்வதியின் மகனான விநாயகர் வட இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு, ஆறாம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியது. அதற்கு முன்பு சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

முதலாம் ராஜராஜ சோழன் எடுப்பித்த தஞ்சை பெரிய கோயிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக கணபதியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். 'பரிவார ஆலயத்துப் பிள்ளையார் கணவதியார்' என கல்வெட்டு இவரைக் குறிக்கிறது. இவருக்கு வாழைப்பழம் படையலாக படைக்கப்பட்டதும் அந்தக் கல்வெட்டால் தெரிய வருகிறது.

மரத்தடி பிள்ளையார் வழிபாடு :

படிப்படியாக விநாயகர் வழிபாடு அதிகரித்து, மரத்தடி பிள்ளையார் என தமிழகத்தில் அவருக்கு கோயிலே இல்லாத ஊர் இல்லை என்ற நிலை உருவானது. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்த நாள் கொண்டாடப்படுகிறது.

27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா :

அதன்படி இந்த ஆண்டு வரும் 27ம் தேதி(Vinayagar Chaturthi 2025 Date) இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் படைக்கப்பட்டு விழா களை கட்டும். இதேபோன்று, பெரிய பெரிய விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படும்.

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்(Pillayarpatti Karpaga Vinayagar Temple) உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கணபதியை வழிபடுவார்கள். அந்த வகையில், விநாயகர் சதுர்த்திக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் :

சண்டிகேசுவரர் சந்நிதியில் இருந்து கொடி கொண்டு செல்லப்பட்டு கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

மேலும் படிக்க : இயற்கை பொருட்களால் விநாயகர் சிலைகள் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

10 நாட்கள் நடைபெறும் விழாவில், இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காலை, மாலை உற்சவ விநாயகர் திருவீதி உலா நடைபெறும். விழாவின் 6ம் நாள் மாலை கஜமுக சூரசம்ஹாரமும், 9ம் நாள் தேரோட்டமும், 10ம் நாள் விநாயகர் சதுர்த்தி(Ganesh Chaturthi 2025 Celebration) அன்று காலை தீர்த்தவாரி உற்சவமும், மதியம் மோதகம் படையலும் இருக்கும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விநாயகர் சதுர்த்து அன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகரை தரிசனம் செய்து இறைவன் அருளை பெறுவர்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in