Arattai Messenger App Chat Features in Tamil  
தமிழ்நாடு

அரட்டையின் சிறப்பு அம்சங்கள்-தெரிஞ்சுகிட்டு உபயோகப்படுத்துங்க!

Arattai Chat App Features : தமிழகத்தில் ஒரு கிளையாக தொடங்கி, இன்று உலகளவில் அறியப்பட்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஜோஹோ. இந்த நிறுவனம் 2021-ல் அறிமுகப்படுத்திய அரட்டை செயலியின் முழு விவரத்தை காணலாம்.

Bala Murugan

அரட்டையின் அம்சம் :

Arattai Messenger App Chat Features in Tamil : அரட்டை செயலி: கடந்த 2021-ல் அரட்டை செயலியை ஜோஹோ நிறுவனம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து உபயோகித்து வருகின்றனர். அதன் வேகம் பன்மடங்கு அதிகரித்து, ஆயிரத்தில் இருந்து லட்சமாக வளர்ந்து, தினசரி டவுன்லோடு எண்ணிக்கையும் தொடர்ந்து கூடியுள்ளது.

வழக்கமாக ஒரு மெசேஜிங் செயலியில் பயனருக்கு என்னென்ன தேவையோ அத்தனை அம்சங்களையும் மிக துள்ளியமாக இந்த அரட்டை செயலியில் வடிவமைத்துள்ளனர். மேலும், வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், லொகேஷன் ஷேரிங், படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர, ஸ்டோரீஸ் உள்ளிட்ட அம்சங்கள்(Arattai App Features) இந்த செயலியில் மிக கச்சிதமாக இருக்கிறது.

அரட்டை செயலி உபயோகம் :

இன்று அனைவரும் அறிந்த வாட்ஸ்-அப் செயலி போலவே அரட்டை செயலியை பயன்படுத்தவும் பயனர்கள் தங்கள் மொபைல் எண் துணையோடு பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் ‘அரட்டை’ செயலியில் பதிவு செய்த மற்ற பயனர்களுடன் சாட் மற்றும் அரட்டையின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தலாம்.

அரட்டை பதிவிறக்கும் முறை :

ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணமின்றி டவுன்லோடு செய்து(Arattai App Download), தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். மேலும், பயனர் ஒருவர் தனது அரட்டை கணக்கை ஐந்து சாதனங்களுடன் லிங்க் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி ஆண்ட்ராய்டு டிவி சப்போர்ட்டை கொண்டுள்ளது. இது மற்ற மெசேஜிங் செயலிகளில் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக திகழ்கிறது.

அரட்டை செயலியின் சிறப்பு அம்சங்கள்

பயனர்களுக்கு பிரத்யேகமாக ‘பாக்கெட்’ எனும் கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்தை அரட்டை செயலி(ZOHO Arattai Features in Tamilarattai app download) வழங்கி வருகிறது. இதனால், பொதுவாக வாட்ஸ்-அப் செயலியில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய முக்கிய மெசேஜ்களை Save செய்து கொள்ள தங்களது எண்ணுக்கே சுயமாக மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால், அரட்டையில் உள்ள ‘பாக்கெட்’ ஸ்டோரேஜ் அம்சம் இதற்கு மாற்றாக அமைந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது தேவையான மெசேஜ்கள், மீடியாக்கள் மற்றும் நோட்ஸ்களை Save செய்து கொள்ளலாம்.

ஏஐ சாட்போட் கிடையாது

பல்வேறு தளங்களில் இப்போது ஏஐ சாட்பாட் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் பயனரின் தேவைக்கு மேலாக ஏஐ சாட்பாட் அம்சம் திணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது. இந்தச் சூழலில் இப்போதைக்கு ஏஐ செயல்பாட்டை பயனர்கள் மீது அரட்டை(AI Features in Arattai App) திணிக்காமல் உள்ளது.

மீட்டிங்ஸ் ஆப்ஷன்

முக்கியமாக இதில் உள்ள மீட்டிங்ஸ் ஆப்ஷன். இதன் மூலம் பயனர்கள் நேரடியாக அரட்டை செயலியில் இருந்தபடி நேரடியாக மீட்டிங்ஸை கிரியேட் செய்யவும், சக பயனர்கள் உருவாக்கிய மீட்டிங்ஸில் இணையவும், அதை திட்டமிடவும் முடியும். இதில் மென்ஷன்ஸ் டேப் அம்சமும் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் முக்கிய மெசேஜ்களை மிஸ் செய்யாமல் பார்க்க முடியும்.

தகவல்கள் 3வது நபர்களுக்கு விற்கப்படாது

வாடிக்​கை​யாளர்​களின் தகவல்​களை மூன்​றாவது நபருக்கு கண்​டிப்​பாக விற்க மாட்​டோம் என சோஹோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்களின் தரவுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள டேட்டா சென்டர்களில் சேமிக்கப்படும் என்றும் சோஹோ கூறியுள்ளது. இதன் மூலம் Ad-Free பயனர் அனுபவம் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : ஆஃப் ஸ்டோரில் முதல் இடத்தில் உலா! இனி ஜோஹோதான் முதலிடம்!

சவாலில் அரட்டை

ஏற்கெனவே வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் சந்தையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இந்நிலையில், அரட்டை செயலி இந்த சவாலை கடந்து பயனர்களுக்கு முற்றிலும் சிறப்பான சேவையை கொடுக்கும் நிலை மாறினால் மற்ற செயலிகளை போலவே ‘மேட்-இன்-இந்தியா’ செயலியான அரட்டையும் ஆதிக்கம் செலுத்தலாம். எனவே, அரட்டையின் அடுத்த கட்ட அப்டேட் எப்படி இருக்கும் என்பதே பயனர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.