Rajasthan Jaipur IIT Student Creates World's First Speech-To-Speech AI Model LUNA AI  Jaipur IIT Student - LUNA AI Photo
தொழில்நுட்பம்

மொழிபெயர்ப்பு செய்யும் "LUNA AI" - ஐஐடி மாணவர் அசத்தல்!

Jaipur IIT Student Creates Luna AI Model : பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​ அசத்தியுள்ளார்.

Bala Murugan

ஏஐ வளர்ச்சி :

Jaipur IIT Student Creates Luna AI Model : இன்றைய காலகட்டத்தில் உலகளவில், மனிதனின் உதவி இல்லாமல், ஏஐ தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரோபோக்கள், மென்பொருள்கள், நாட்டு நடப்பு வரை அனைத்தும் ஏஐ- யில் வளர்ந்து வருகிறது.

இதனால், நாட்டின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக காணப்பட்டாலும், அதைவிட அதனால் ஏற்படும் இழப்பும், அதைக்காட்டிலும் அதிகம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் உலாவி வருகிறது.

மேலும், சமீபகாலமாக ஏஐ தொழில் நுட்ப வளர்ச்சியில், மனிதனுக்கு கிடைக்கும் வேளை கூட பறிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து இடைநீக்கம் செய்து, ஏஐ-யால் நிறுவன வளர்ச்சி, ஆள்குறைப்பு என்று கதைத்து வருகின்றனர். ஆனால், ஏஐ நன்மைகளில் சில நம் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

வாரணசி ஐஐடி மாணவர் சாதனை

இந்நிலையில், ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார்.

மனிதர்​கள் பேசுவதை போல் குரலை நேரடி​யாக மொழிபெயர்ப்பு செய்​யும் லூனா என்ற செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை இவர் உரு​வாக்​கி​யுள்​ளார். இது பேச்சு வடி​விலேயே விரை​வாக​வும், உணர்​வுபூர்​வ​மாக​வும் குரல் வடி​விலேயே மொழி பெயர்க்​கிறது.

இதில் உள்ள தொழில்​நுட்ப கட்​டமைப்பு பேசும் தொனியை மாற்​ற​வும், பாட​வும் அனு​ம​திக்​கிறது. இது மனிதர்​களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்​படுத்​துகிறது.இதை உரு​வாக்​கிய ஸ்பார்ஸ் அகர்​வால், சமீபத்​தில் மத்​திய தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை சந்​தித்து பாராட்​டைப் பெற்​றார்.

மேலும் படிக்க : அல்பேனியாவின் AI அமைச்சர் : ஊழலை ஒழிக்க "83 குழந்தைகள்" அதிரடி

லூனா குறித்து மாணவர் கருத்து

லூனா ஏஐ குறித்து அகர்​வால் கூறுகை​யில், ‘‘இந்​தி​யா​வின் ஏஐ எங்கே என்ற கேள்​வியை அனை​வரும் கேட்​கின்​றனர். அதற்​கான பதில் இந்த லூனா ஏஐ மாடல்​தான். பேச்சை நேரடி​யாக மொழி பெயர்க்​கும் உலகின் முதல் ஏஐ தொழில்​நுட்​பம் இது​தான்.

உலகத் தரத்​திலான தொழில்​நுட்​பம் இந்​தி​யா​வில் இருந்து வரும் என்​ப​தற்கு இது​தான் சான்​று’’ என்​றார்.லூனா ஏஐ தொழில்​நுட்​பம்: உரு​வாக்​கத்​தில் அகர்​வாலுடன் இணைந்து நிதிஷ் கார்த்​திக், அபூர்வ் சிங் மற்​றும் பிர​தி​யுஷ் குமார் ஆகியோ​ரும் பணி​யாற்​றி​யுள்​ளனர்​.