

செயற்கை நுண்ணறிவு அமைச்சர்
Albania PM on AI Minister Diella Pregnant : தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா கடந்த செப்டம்பரில், உலகிலேயே முதல் முறையாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமனம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஊழலை ஒழிக்க ஏஐ அமைச்சர்
மனிதர் அல்லாத செயற்கை அமைச்சர் என்ற பெயர் பெற்ற முதல் நாடானது அல்பேனியா. டயல்லா என்று பெயரிடப்பட்ட அந்த அமைச்சர் பொது கொள்முதல் துறைக்கு நியமிக்கப்பட்டார். வெளிப்படை தன்மையுடன், முறைகேடு எதுவும் இல்லாமல் இந்தத்துறை செயல்படும் விதமாக அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
83 ஏஐ குழந்தைகள்
இந்தநிலையில், அல்பேனிய பிரதமர் எடி ராமா செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அமைச்சர் டயல்லா(AI Minister Diella Pregnant News in Tamil), கர்ப்பமாக இருப்பதாகவும் 83 குழந்தைகள் பிறக்கும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
நாடாளுமன்ற நிகழ்வுகளை கண்காணிப்பர்
சோஷலிஸ்ட் கட்சி எம்பிக்களுக்கு உதவும் வகையில் 83 உதவியாளர்கள் அல்லது குழந்தைகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக செயற்கையாக உருவாக்கப்படும் 83 உதவியாளர்கள் நாடாளுமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்வர்.
எம்பிக்களுக்கு பதிலளிக்கும் ஏஐ குழந்தைகள்
எம்பிக்கள் அவையில் இல்லாத போது அவர்கள் தவறவிட்ட விவாதங்கள் குறித்தும் அவர்கள் வந்ததும் தெரிவிப்பர். தேவைப்பட்டால் எதிர்க்கட்சியினருக்கு அவையில் அவர்கள் பதிலும் அளிப்பர். இந்த புதிய முறை அடுத்த ஆண்டு இறுதியில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க : ”ஊழலுக்கு 100% முற்றுப்புள்ளி” : அல்பேனியாவில் ’AI’ அமைச்சர்
செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்பாட்டுக்கு வரும் அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள் முழு பயன்பாட்டிற்கு வரும் போது செம்மையான நிர்வாகம், ஊழலற்ற வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று கூறப்படுகிறது.
==============