WhatsApp Sound Audio Stickers New Feature Update
புதிய அம்சத்தின் அறிமுகம்
வாட்ஸ்ஆப்-யில் நாம் அனுப்பும் ஸ்டிக்கர்கள் ஒலி எழுப்பக்கூடிய வகையில் அமையும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப், பயனர்களின் தேவைகளுக்கும் காலத்திற்கும் ஏற்ப அவ்வப்போது பல்வேறு புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் குரல்/வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப், உலகளவில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.
ஒலி ஸ்டிக்கர்கள் உருவாக்கும் முறை
தற்போது வாட்ஸ்ஆப்பில் சாதாரண புகைப்படங்களாகவும் அசையும் படங்களாகவும் (Animated Stickers) மட்டுமே ஸ்டிக்கர்களை அனுப்ப முடிகிறது.
மெட்டாவின் Sound Stickers புதிய அம்சம்
இந்நிலையில், அந்த ஸ்டிக்கர்களை ஒலி எழுப்பக்கூடிய வகையில் அதாவது Sound Stickers அனுப்பும் வசதியை மெட்டா நிறுவனம் தற்போது சோதித்து வருகிறது.
ஒரு புகைப்படத்தை ஸ்டிக்கராக மாற்றும்போது, அதில் உள்ள 'சவுண்ட்வேவ்' (Soundwave) குறியீட்டைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஆடியோ பயன்படுத்தும் முறை
நமது சொந்தக் குரலையோ அல்லது மொபைலில் உள்ள ஆடியோவையோ இணைத்துப் புதிதாக ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும். இந்த ஆடியோவின் அளவு அதிகபட்சமாக 10 விநாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயல்படும் விதம்
பயனர்கள் அனுப்பிய இந்த ஒலி ஸ்டிக்கரை சாட்டில் (Chat) தொடுவதன் மூலம் அந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், இந்த ஸ்டிக்கர்கள் மீது ஸ்பீக்கர் சின்னமும் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.
பெரும் எதிர்பார்ப்பில் மெட்டா பயனர்கள்
அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த புதிய வசதி விரைவில் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜயதசமி கொண்டாட்டம் கோலாகலம்: ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோயிலில் 'வித்யாரம்பம்'ஏடு தொடங்கும் நிகழ்வு!
===============