American scientists Achieved to creating an artificial heart, liver is major milestone in medicine 
உலகம்

மருத்துவ உலகில் புரட்சி : செயற்கையாக இதயம், கல்லீரல் உருவாக்கம்

American Scientists Creates Artificial Heart And Liver : செயற்கையாக இதயம், கல்லீரலை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் புரிந்துள்ள சாதனை, மருத்துவ உலகில் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Kannan

செயற்கை இதயம், கல்லீரல் :

American Scientists Creates Artificial Heart And Liver : அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை(Artificial Human Organs) படைத்து உள்​ளனர். இதுதொடர்​பான ஆய்​வறிக்கை முன்​னணி மருத்​துவ இதழ்​களில் வெளி​யிடப்​பட்டு உள்​ளது.

ஸ்டெம்செல்களை பயன்படுத்தி சாதனை :

அந்த ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது, ஆய்​வகத்​தில் ஸ்டெம் செல்​களை (Stem Cells) பயன்​படுத்தி செயற்கை இதயத்தை உரு​வாக்​கும் ஆராய்ச்​சி 2017ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16 நாட்​களில் எங்​கள் ஆய்​வகத்​தில் செயற்கை இதயம்(Artificial Heart Invention) உரு​வாக்​கப்​பட்​டது. இந்த செயற்கை இதயம், மனித இதயத்தை போன்று துடிக்​கிறது.

இதே​போல செயற்கை கல்​லீரலை​யும்(Artificial Liver Invention) உரு​வாக்கி உள்​ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்​களை​யும் உரு​வாக்கி இருக்​கிறோம். எங்​களது ஆராய்ச்​சி​யின் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களை காப்​பாற்ற முடி​யும்” இவ்​வாறு ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

மேலும் படிக்க : 3 நிமிடத்தில் முறிந்த எலும்புகளை ஒட்டலாம்: பசையை கண்டுபிடித்த சீனா

மருத்துவ உலகில் புதிய மைல்கல்

மனிதனின் பரிணாம வளர்ச்சி, நோய் பரவல் காரணங்கள், மருந்துகளின் செயல்திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ள இவை பெரிதும் பயன்படும். வருங்காலங்களில் இதயம், கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவோரின் உயிர்களை எளிதில் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள்(American Scientists) தெரிவிக்கின்றனர்.

=======