3 நிமிடத்தில் முறிந்த எலும்புகளை ஒட்டலாம்: பசையை கண்டுபிடித்த சீனா

China Bone Glue Repair Bones in Three Minutes : முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடங்களில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
China Bone Glue Repair Bone in Three Minutes News in Tamil
China Bone Glue Repair Bone in Three Minutes News in Tamil
1 min read

சிறப்பான சிகிச்சை முறைகள் :

China Bone Glue Repair Bone in Three Minutes News in Tamil : நவீன மருத்துவ துறையில் சிறப்பான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சைகளும் குறைந்த அளவு ரத்தப்போக்கு, குறைந்த அளவு வலி, விரைவான முன்னேற்றம் என நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது.

எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை :

ஒருவருக்கு எலும்பு முறிவு(Broken Bone Treatment) ஏற்பட்டால் அதன் தன்மையை பொருத்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவார்கள். சில நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் முறிந்த எலும்புகளை சேர்க்க அல்லது இணைக்க உலோகத்தை பயன்படுத்துவது உண்டு. எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது உண்டு. சிலருக்கு அந்த உலோகம் உடலில் உள்ள எலும்போடு அப்படியே வாழ்நாள் முழுவதும் இருப்பதும் உண்டு.

எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை :

இந்தச் சூழலில் உடைந்த எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, அவற்றை ஒட்ட வைக்கும் பசையினை சீனாவை(China Bone Glue) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

சீன விஞ்ஞானிகள் அசத்தலான கண்டுபிடிப்பு :

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள்(Zhejiang Doctors) இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். சிப்பிகள் நீருக்கடியில் சில இடங்களில் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதை கவனித்த பிறகு இந்த எலும்பு பசையை(Bone Glue) உருவாக்கும் யோசனை ஏற்பட்டதாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 நிமிடத்தில் எலும்புகளை ஒட்டலாம்

இந்த பசையை கொண்டு உடைந்த எலும்புகளை மூன்று நிமிடங்களில் ஒட்ட முடியும் என்கின்றனர். எலும்புகள் குணமடைந்ததும் இந்த பசை தானாகவே கரைந்து விடும். ‘போன்-02’ என அறியப்படும்(Bone-02 Glue Experiment) இந்த பசையின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு தன்மை உள்ளிட்டவை ஆய்வு கூடத்தில் சோதனை நடத்தியதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 150 பேருக்கு இதை கொண்டு பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க : Dr A.V. சீனிவாசன் நரம்பியல் மருத்துவ சாதனைக்கு அமெரிக்க விருது..

அறுவை சிகிச்சையே தேவைப்படாது :

இது உலக அளவில் அறிமுகமாகும் போது எலும்பு முறிவு சிகிச்சையில்(Broken Bone Repair Glue in China) பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மெட்டல் இம்பிளான்ட் செய்ய வேண்டிய தேவை இருக்காது. இது மருத்துவ உலகில் புரட்சியாக அமையும். விபத்தின் போது ஏற்படும், உடல் குறைபாடுகளும் இனி தீர்க்கப்படும்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in