Artemis team returns to Earth, achieves feat of reaching the other side of the moon  NASA twitter
உலகம்

பூமிக்கு திரும்பிய ஆர்டெமிஸ் குழு : நிலவின் மறுபக்கத்தை சென்று பார்த்து சாதித்த 4 வீரர்கள்!

நிலவை ஆய்வு செய்ய சென்ற நாசாவின் ஆர்டெமிஸ் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பி சாதனை படைத்துள்ளனர்

Rohini

வரலாற்று சிறப்புமிக்க 2 (Artemis II) விண்கலம்

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் 2 (Artemis II) விண்கலம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவைச் சுற்றி வர மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதல் பயணமாக நான்கு விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது

நிலவின் மறுபக்கத்தை காட்டும் Artemis II

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் நீண்டகால வெற்றி திட்டமான 'ஆர்டெமிஸ்' வரிசையில், ஆர்டெமிஸ்-2 விண்கலம் தற்போது வெற்றிகரமாக நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

சுமார் ரூ.8.64 லட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில், விண்வெளி வீரர்கள் எடுத்துள்ள பூமியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை மூலம் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும் , நேரடியாகவும் காணும் முதல் வீர்கள் என்ற சிறப்பை பெற உள்ளனர்

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியாகி வீரர்கள்

10 நாள் ஆய்வை வெற்றிரமாக முடித்துக்கொண்டு

ஆர்டெமிஸ்-2 விண்கலமும், அதன் நான்கு பேர் கொண்ட குழுவும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

வரலாற்றில் புதிய சாதனை

நிலவின் மறுபக்கத்தை அடைவதற்காக மனித வரலாற்றிலேயே முதன் முறையாக, பூமியிலிருந்து சுமார் 2,52,756 மைல்கள் தொலைவுக்கு விண்வெளியில் பயணித்து இக்குழு புதிய சாதனை படைத்தது.

ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்கள் அடங்கிய இக்குழு, அமெரிக்கா திரும்பியுள்ளது.

50 ஆண்டுகளுக்கு பிறகு : மனிதரால் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்

முன்னதாக்க இக்குழு , நிலவில் இருந்து பூமியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது .ஓரியன் (Orion) விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு தொலைவிலிருந்து மனிதர்களால் எடுக்கப்பட்ட முதல் புகைப்பட பதிவாகும்

விண்கலத்தின் சூரிய மின்தகடு சிறகுகளில் (Solar array wings) பொருத்தப்பட்ட கேமரா, விண்வெளியின் அடர்ந்த இருளில் பூமி ஒரு மெல்லிய வெள்ளிப் பிறையைப் போல காட்சியளிப்பதைப் படம் பிடித்துள்ளது மிக சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்டுகிறது.

பூமியின் பிரமிக்கத்தக்க புகைப்படம்

விண்கலத்தின் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட உயர்-திறன் (High-resolution) புகைப்படத்தில், பசிபிக் பெருங்கடலின் அடர் நீல நிறமும், வெண்மையான மேகக்கூட்டங்களும் மிகத் துல்லியமாகத் அப்புகைப்படத்தில் தெரிகிறது.

வீர்கள் எடுத்த பூமியின் பிரமிக்கமான புகைப்படத்தை நாசா பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க :பிரமிக்க வைக்கும் பூமியின் புகைப்படங்கள் : விண்வெளியில் படம் பிடித்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள் : படத்தை பகிர்ந்த நாசா!