Elon Musk once again topped Forbes' list of real-time billionaires, Shiv Nadar also been included 
உலகம்

Forbes Billionaires : 500 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடம்

Elon Musk First in Forbes Billionaires List 2025 : ஃபோர்ப்ஸின் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் எலான் மஸ்க். தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் இடம்பெற்றுள்ளார்.

Kannan

உலக பில்லினியர்கள் முதலிடத்தில் எலான் மஸ்க் :

Elon Musk First in Forbes Billionaires List 2025 : உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், மீண்டும் ஃபோர்ப்ஸின் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். வரலாற்றில் முதல்முறையாக 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை(Elon Musk Net Worth) எட்டிய நபர் இவரே என்பதில் ஆச்சரியமில்லை.

நிறுவனங்கள் அபார வளர்ச்சி :

டெஸ்லா(Tesla) மற்றும் ஸ்பெஸ்எக்ஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால், எலான் மஸ்க் இன்று உலகின் மிகப்பெரிய செல்வந்தராக அவரை திகழ வைக்கிறது. டெஸ்லா பங்குகள் சுமார் 4 சதவீதம் நேற்று உயர்ந்தன. பங்குகள் உச்சம் தொட்ட அந்த தருணத்தில், மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 500.1 பில்லியன்(Elon Muck Net Worth) டாலரை எட்டியது.

அசுர வளர்ச்சியில் டெஸ்லா :

சந்தை முடிவடையும் நேரத்தில் பங்கு விலை சற்று குறைந்தாலும், அவர் உலகின் முதல் 500 பில்லியன் டாலர் பில்லியனாகவே பதிவு செய்யப்பட்டார். தற்போதைய நிலையில் டெஸ்லா பங்கு 459.46 டாலராக உள்ளது, மேலும் விரைவில் 500 டாலரைத் தாண்டும் வாய்ப்பு நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் 12.4 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கூடுதலாக வாங்கியிருந்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது.

ஃபோர்ப்ஸ் பட்டியல் - எலான் ஆதிக்கம்

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 2020-இல் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது செல்வம் பலமடங்கு அதிகரித்து, இன்று 500 பில்லியன் டாலர் என்ற சாதனை எண்ணிக்கையை எட்டியுள்ளது(Forbes Billionaires Index). உலக தொழில்நுட்பத்திலும், முதலீட்டிலும் மாஸ்க் காட்டும் தாக்கம், அவர் இன்னும் பல வருடங்கள் உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை தக்க வைத்திருப்பார் என்பது உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க : உலகின் டாப் 10 பணக்காரர்கள் : முதலிடத்தில் எலான் மஸ்க்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஷிவ் நாடார் :

இந்தியாவிலும் பில்லியனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, இந்தியாவில் 205 பில்லியனர்கள் உள்ளனர். இதில் சுமார் 14 முன்னணி தொழில்நுட்ப பில்லியனர்கள் இந்தியாவை முன்னேற்றி வருகின்றனர். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவர் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மற்றும் இணை நிறுவனர் ஷிவ் நாடார்(Shiv Nadar in Forbes Billionaires List). அவரின் நிகர சொத்து மதிப்பு $31.5 பில்லியன் ஆகும். இதன் மூலம் அவர் 2025 ஃபோர்ப்ஸ் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் நான்காவது செல்வந்தராகவும் பதிவு செய்துள்ளார்.

=====