
உலக செல்வந்தர்கள் - போர்ப்ஸ் பட்டியல் :
Elon Musk First in World Top 10 Richest Man 2025 : உலக அளவில் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அவர்களின் சொத்து விவரம், ஆண்டு தோறும் ஈட்டும் லாபத்தின் அடிப்படையில், பட்டியல் வெளியிடப்படுகிறது. 1987ம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது
மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்கின்றன. அதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ்(Forbes) பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.
உலகின் டாப் 10 செல்வந்தர்கள் :
2025ம் ஆண்டு, ஆகஸ்டு 1ம் தேதி நிலவரப்படி உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில்(World Top 10 Richest Man List 2025) 9 பேர் அமெரிக்கர்கள். ஒருவர் மட்டும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். ஐரோப்பிய நாடுகளை தவிர வேறு கண்டத்தை சேர்ந்த எவரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
முதலிடத்தில் எலான் மஸ்க் :
உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டாலர் ஆகும்.அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த டாப் 10 பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார். இவரை தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் :
1. எலோன் மஸ்க் (401 பில்லியன் டாலர்) அமெரிக்கா
2. லாரி எலிசன் (299.6 பில்லியன் டாலர்) அமெரிக்கா
3. மார்க் ஜுக்கர்பெர்க் (266.7 பில்லியன் டாலர்) அமெரிக்கா
4. ஜெஃப் பெசோஸ் (246.4 பில்லியன் டாலர்) அமெரிக்கா
5. லாரி பேஜ் (158 பில்லியன் டாலர்) அமெரிக்கா
6. ஜென்சன் ஹுவாங் (154.8 பில்லியன் டாலர்) அமெரிக்கா
7. செர்ஜி பிரின் (150.8 பில்லியன் டாலர்) அமெரிக்கா
8. ஸ்டீவ் பால்மர் (148.7 பில்லியன் டாலர்) அமெரிக்கா
9. வாரன் பஃபெட்( 143.4 பில்லியன் டாலர்) அமெரிக்கா
10. பெர்னார்ட் அர்னால்ட்(142.9 பில்லியன் டாலர்) பிரான்ஸ்
மேலும் படிக்க : உலகின் அதி நம்பிக்கையான தலைவர் : 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் மோடி