சர்ச்சை நாயகன் கிம் ஜாங் உன் :
Ice Cream Hamburger Karaoke Words Ban in North Korea : வட கொரியா என்றாலே சர்ச்சை தான். எப்படி ஆசிய கண்டத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறதோ, அதேபோன்று, கொரிய தீப கற்பத்தில், இந்த நாட்டு அரசு விதிக்கும் உத்தரவுகளும் சர்ச்சையாகவே இருக்கும். தற்போது அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் ( Kim Jong Un ) வித்தியாசமான உத்தரவுகளை பிறப்பித்து, உலக நாடுகளை அதிர்ச்சிகுள்ளாக்குவதில் வல்லவர்.
ஆங்கில வார்த்தைகளுக்கு தடை :
அந்த வகையில் மேற்கத்திய நாடுகளில்(Western Countries) பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தன் நாட்டு மக்கள் உச்சரிக்க அவர் தடை விதித்து இருக்கிறார். வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் கூடாது, மேற்கத்திய ஆடைகளை அணியக்கூடாது, ஆண்கள் எப்படி சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு நடைமுறையில் உள்ளன.
அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு
குறிப்பாக சுற்றுலா தலங்களில் இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஹாம்பர்கர் (Hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karaoke) உள்ளிட் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை விதித்து அதிபர் கிம் ஜாங்(Kim Jong Un) ஆணை பிறப்பித்து இருக்கிறார்.
வெளிநாட்டு மோகத்துக்கு முற்றுப்புள்ளி :
மேற்கத்திய தாக்கத்தை குறைக்கும் விதமாக, இந்த சொற்களுக்கு இணையாக வட கொரிய அரசு(North Korea Banned Words in Tamil) அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக சுற்றுலா தலங்களில் பணி புரிவோருக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐஸ்கிரீம் என கூறக்கூடாது
ஐஸ்கிரிம் என்ற வார்த்தைக்கு பதில் எஸ்கிமோ(Eskimo) என்ற வார்த்தையை பிரயோகப்படுத்த வேண்டும், ஹாம்பர்கர் என்ற சொல்லுக்கு பதில் இரண்டடுக்கு இறைச்சி துண்டு, துண்டாக வெட்டப்பட்ட ரொட்டி ("Double Bread with Ground Beef") என்று பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 3 நிமிடத்தில் முறிந்த எலும்புகளை ஒட்டலாம்: பசையை கண்டுபிடித்த சீனா
வட கொரியாவில் பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதியாக சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரும் போது, தென் கொரியாவின் தாக்கம் இன்றி, வட கொரியர்கள் தனித்து இயங்க வேண்டும், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காகவே மொழி பிரச்சினையை அதிபர் கிம் ஜாங் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.
=======