United Nations on Gaza Food Crisis 2025 
உலகம்

காசாவில் கடுமையான உணவு பஞ்சம் : காலி தட்டுகளுடன் அலையும் மக்கள்

United Nations on Gaza Food Crisis 2025 : மேற்கு ஆசியாவில் முதல்முறையாக காசாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.

Kannan

ஹமாஸ் மீது தீவிர தாக்குதல் :

United Nations on Gaza Food Crisis 2025 : ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது(Israel Hamas War). ஹமாஸ் தளங்கள், போராளி குழுக்கள் தங்கி இருப்பதாக கூறப்படும் இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்திய வந்த இஸ்ரேல், கடந்த ஒரு மாதமாக காசா பகுதி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

காசா மீது ஏவுகணைகள் தாக்குதல் :

சரமாரியாக வீசப்படும் இஸ்ரேல் ஏவுகணைகள், காசா பகுதியில்(Israel Gaza Attack) கட்டடங்களை தரைமட்டமாக்கி வருகின்றன. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக புலம் பெயர்ந்து உள்ளனர்.

உணவுப் பஞ்சம், பரிதவிக்கும் மக்கள் :

உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளும் முடங்கி கிடக்கின்றன. மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம்(Famine in Gaza) ஏற்பட்டுள்ளது என ஐநா சபைஅறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பசியால் வாடும் மக்கள் :

15ம் தேதி முதல் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், காலி தட்டுகளுடன் உணவுக்காக அலைந்து திரிவதாகவும் தெரிகிறது. தினசரி மரணங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. 22 மாதங்களாக இஸ்ரேல்(Israel Gaza Attack) நடத்தி வரும் தாக்குதலில் 62,192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : காசாவில் கடும் உணவு பஞ்சம் : பால் இன்றி மடியும் ’குழந்தைகள்’

இஸ்ரேல் அரசு மறுப்பு :

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என்றும் இஸ்ரேல் அரசு(Israel Govt) பதிலடி கொடுத்து இருக்கிறது.

====