உக்ரைன் - ரஷ்யா போர் :
Donald Trump on Russia Ukraine War: ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து ஓராண்டை கடந்து விட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகின. தொடர்ந்து இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் ஏற்பட்டு இருக்கும் சேதங்கள் கணக்கில் அடங்காதவை.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி :
ரஷ்யா - உக்ரைன் போரை(Russia Ukraine War) முடிவு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிடிவாதமாக இருக்கிறார். இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் அவர், வரி விதிப்பு மூலம் ரஷ்யாவை கட்டுப்படுத்த வியூகம் வகுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை :
இதுபற்றி வாஷிங்டனில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு டோனால்ட் டிரம்ப் பேட்டியளித்தார்(Donald Trump Press Meet). “இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த அமெரிக்க முடிவு செய்திருக்கிறது. 50 நாட்களில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்(Russia Ukraine War Ceasefire) ஏற்படவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
புதின் மீது நம்பிக்கையில்லை :
அதிபர் விளாதிமிர் பூட்டின்(Vladimir Putin) மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக நான் அவரை நினைத்திருந்தேன். அவர் மிகவும் அழகாக பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகள் இடம்பெறும்”
ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் மீது தொடர்ந்து அதிருப்தியில் இருக்கும் அதிபர் டோனால்ட் ட்ரம்ப், அடுத்த கட்டங்களில் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் ரஷ்யா-உக்ரைன்(Russia Ukraine War) போரை நிறுத்துமா? அல்லது உலகப் போருக்கு வழி வகுத்து விடுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
======