பிரேசிலுக்கு 50%, கனடாவுக்கு 35% வரி : வரிந்து கட்டும் ட்ரம்ப்

US Tariff on Canada and Mexico in Tamil : ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும், என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Donald Trump Announcement Of US Tariff on Canada and Mexico in Tamil
Donald Trump Announcement Of US Tariff on Canada and Mexico in Tamil
1 min read

இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி :

US Tariff on Canada and Mexico in Tamil : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதில் டொனால்டு ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்தாலும், அதை அவர் கண்டு கொள்வதே கிடையாது. அமெரிக்க பொருட்கள் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் ட்ரம்ப் எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

அதேபோன்று, அமெரிக்க டாலரின்(America Dollar) மதிப்பு குறைந்து விடக் கூடாது என்பதிலும் டோனால்ட் டிரம்ப்(Donald Trump) உறுதியாக இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு என கரன்சி எதையும் உருவாக்கி விடக் கூடாது என்பதிலும் அவர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

ஆகஸ்டு 1 முதல் கூடுதல் வரி :

ஏப்ரல் மாதம் இந்தியா(US Tariff on India) உட்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்த டொனால்ட் டிரம்ப், அதை ஜூலை 9ம் தேதி வரை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் இந்த நடைமுறையை ஆகஸ்டு 1, வரை நீட்டித்து இருக்கிறார்.

பிரேசிலுக்கு 50% வரி :

இதனிடையே, வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரேசிலுக்கு(US Tariff on Brazil) 50 சதவீத வரி விதித்து டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளுக்கு, புதிய வரி விதிப்பு குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது.

கனடாவுக்கு 35% வரி, ட்ரம்ப் அதிரடி :

ஆரம்பம் முதலே கனடா(US Tariff on Canada) மீது ஒரு கண் வைத்துள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி விதித்துள்ளார். ’'ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' எனவும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் கனடா தோல்வி அடைந்து விட்டது.

இதனால் கனடா பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்புகளை கனடா எற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in