நோபல் பரிசு 2025 :
Nobel Prize in Physiology or Medicine 2025 Winners List Announcement : நோபல் பரிசு வழங்கும் விழா 6 நாட்களாக கொடுக்கப்பட இருக்கும் நிலையில், மருத்துவத்தில் நோபல் பரிசு அறிவிக்கும் முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ(Mary E. Brunkow), பிரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி(Shimon Sakaguchi) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துவது பற்றிய ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. மருத்துவத்திற்கான நோபல் பரிசை இவர்கள் 3 நபர்களும் தட்டி சென்ற நிலையில்,இவர்களுக்கு அவர்கள் நாட்டு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் நோபல் பரிசு
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,
இயற்பியல் - அக்.,7
வேதியியல் - அக்.,8
இலக்கியம் - அக்.,9
அமைதி - அக்.,10
பொருளாதாரம் - அக்., 13 என்ற கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ’நோபல் பரிசு’ காத்திருக்கும் டிரம்ப் : இந்த ஆண்டு யாருக்கு..?
டிரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா?
இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியதால், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுள்ளதை அடுத்து அக்.,10ம் தேதி அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த எதிர்பார்ப்பு குறித்து நெட்டிசன்கள் உலகளவில் கருத்துகளை மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.