’நோபல் பரிசு’ காத்திருக்கும் டிரம்ப் : இந்த ஆண்டு யாருக்கு..?

US President Donald Trump on Nobel Peace Price : 10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
US President Trump is waiting with great anticipation as the Nobel Peace Prize
US President Trump is waiting with great anticipation as the Nobel Peace Prize
2 min read

அமைதிக்கான நோபல் பரிசு

US President Donald Trump on Nobel Peace Price : உலக அளவில் அமைதிக்காக பாடுபடுபவர்களுக்கு நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபர்களை பொருத்தவரை, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசினை பெற்று இருக்கிறார்.

நோபல் பரிசு கேட்கும் அதிபர் டிரம்ப்

உலக அளவில் இதுவரை 7 போர்களை நிறுத்தி இருப்பதாக தொடர்ந்து பேசி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எடுத்த முயற்சியால் காசாவில் அமைதி திரும்பும் சூழல் உருவாகி உள்ளது. ”எனக்கு கட்டாயம் நோபல் பரிசு தர வேண்டும். எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அதிபர் டிரம்ப்.

டிரம்பிற்கு குரல் கொடுக்கும் நாடுகள்

இப்படி நேரடியாகவே நோபல் பரிசு கேட்பதோடு, தனக்காக அந்த பரிசை வழங்கும்படி பிரசாரம் செய்வதையும் மறைமுகமாக ஊக்கப்படுத்தி வருகிறார். இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகள் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு?

இதன் காரணமாக இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது. காசா பிரச்சினையில் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்ட நிலையில், அதை ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டு முன் வந்திருப்பது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலக அளவில் டிரம்பின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது. .

நோபல் பரிசு - முடிவு எப்படி? - விவரம்

இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுகள் அனைத்தையும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் செயல்படும் துறை சார்ந்த பரிசுக் குழுவினர் முடிவு செய்கின்றனர். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டு நாடாளுமன்ற குழுவினரால் முடிவு செய்யப்படுகிறது.

நோபல் பரிசு விண்ணப்பங்கள்

நோபல் அமைதி பரிசுக்கான விண்ணப்பங்கள் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள், பல்கலை பேராசிரியர்கள், ஏற்கனவே நோபல் பரிசு பெற்றவர்கள், யாருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று பரிந்துரைத்து விண்ணப்பிக்கலாம்.

நோபல் பரிசு - 388 விண்ணப்பங்கள்

குறிப்பிட்ட அந்தக் காலக் கெடுவுக்குள் 338 விண்ணப்பங்கள் நோபல் பரிசு கோரி வழங்கப்பட்டன. இதில், அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நோபல் பரிசு கோரி வழங்கப்பட்டுள்ள 94 விண்ணப்பங்களும் அடங்கும். இந்த விண்ணப்பதாரர் பட்டியலில் யார் யார் பெயர்கள் இருக்கின்றன என்பதை நோபல் பரிசு குழு வெளிப்படையாக அறிவிக்காது.

டிகிளாடியா ரம்பிற்காக விண்ணப்பித்தார்

டிரம்ப் தான் நிறுத்தியதாக கூறும் ஏழு போர் நிறுத்தங்களும் ஜனவரி 31ம் தேதிக்கு பின்னர் நடந்தவை. எனவே அடுத்தாண்டு நோபல் பரிசுக்கு வேண்டுமானால் அவரை பரிசீலிக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான கிளாடியா டென்னி என்பவர் ஒவ்வொரு ஆண்டும் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து வருகிறார். இந்த ஆண்டும் அவர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

டிரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா?

எது எப்படி இருந்தாலும், டிரம்பின் பெரும் எதிர்பார்ப்புக்கு என்ன பதில் என்பது வரும் 10ம் தேதி தெரிய வந்து விடும். இந்த ஆண்டு டிரம்பின் பெயர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நார்வே நாட்டைச் சேர்ந்த ஆஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம், யாருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது. அதன்படி பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த கண்காணிப்பு குழு, சூடான் நாட்டில் செயல்படும் தன்னார்வ மீட்புக் குழு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் டிரம்ப் பெயர் இல்லை. ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி நவல்னி என்ற எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது திடீரென மரணம் அடைந்தார். அவரது மனைவி யூலியா, பரிசுக்கு தேர்வு செய்யப்படும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது

என்ன செய்வார் டிரம்ப்?

அமைதிக்கான நோபல் பரிசு 10ம் தேதி அறிவிக்கப்படும் நிலையில், தனக்கு பரிசு கிடைக்காவிட்டால் டிரம்ப் எப்படி அந்த செய்தியை எதிர்கொள்வார் என்று உலகம் முழுவதும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

=============================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in