பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி :
Donald Trump Tariffs on Foreign Countries : அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்றதில் இருந்து தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார் டொனால்டு டிரம்ப். அவர் கை வைக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் பூதகரமாக கிளம்பி வருகின்றன. அண்மையில் அமலுக்கு வந்த கூடுதல் வரி விதிப்பு பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
டிரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு :
இந்தியா, பிரேசில் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் இறக்குமதி முற்றிலுமாக தடைபெற்று இருக்கிறது. டிரம்பின் வரி விதிப்பிற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெடரல் நீதிமன்றம் வழக்கு :
எதிர்க்கட்சிகள் ஆளும் மாகாணங்கள், பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வரி விதிப்புக்கு தடை விதிக்க கோரி, பெடரல் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
வரி விதிப்பிற்கு தடை :
இதை விசாரித்த நீதிமன்றம், உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டது. வணிகத்தின் இதயத்தில் அடிப்பது போன்றதாகும் எனவும் தீர்ப்பளித்தது. எனினும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அக்டோபர் 14ம் தேதி வரை இப்போதைய வரி விதிப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
டிரம்ப் பிடிவாதம் :
இதுகுறித்து டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”அனைத்து வரிவிதிப்புகளும் அமலில்தான் இருக்கின்றன. இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிவிதிப்புகளை நீக்க வேண்டும் என தவறாக கூறி இருக்கிறது. வரி விதிப்புகளை நீக்கினால் அது அமெரிக்காவுக்கு முழுமையான பேரழிவாக இருக்கும்.
மேலும் படிக்க : இந்தியாவின் ”நல்லுறவை நாசப்படுத்துகிறார்” : டிரம்பிற்கு கண்டனம்
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு :
நமது தொழிலாளர்களுக்கு உதவுவவும், அமெரிக்க தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் இந்த வரிவிதிப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அங்கு கிடைக்கும் தீர்ப்பின் உதவியுடன் நம் தேசத்தை காப்போம். அமெரிக்காவை மீண்டும் வலிமையான, சக்தி வாய்ந்த, பணக்கார நாடாக மாற்றுவோம்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
====