
இந்தியா மீது 50% வரிவிதிப்பு :
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதை அதிபராக பொறுப்பேற்றது முதலே எதிர்த்து வந்த டொனால்டு டிரம்ப், முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தார். கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்ததால், அபராத வரி என்ற பெயரில் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி இருக்கிறார். இதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்கள் விற்பனை முழுமையாக தடைபடும் சூழல் உருவாகி இருக்கிறது. இருநாட்டு நல்லுறவும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு :
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பதை அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக இருக்கும், ஜனநாயக் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த அக்கட்சியின் எம்பிக்கள், ” கச்சா எண்ணெய் தொடர்பாக 50 சதவீத வரி விதிக்கப்படவில்லை. டிரம்ப் ஈரோ காரணமாக இப்படி செயல்படுகிறார்.
அமெரிக்கா - இந்தியா உறவு பாதிப்பு :
இந்த வரி விதிப்பு அமெரிக்க-இந்தியா உறவுகளைப் பாதிக்கும். குறிப்பாக அமெரிக்கர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எண்ணெய் வாங்கும் சீனா போன்ற மற்ற நாடுகளுக்கு வரி விதிக்காமல், இந்தியாவை மட்டும் டிரம்ப் குறிவைத்து செயல்படுவது மிகவும் தவறு.
அரசியல் செய்கிறார் டிரம்ப் :
இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இதன் காரணமாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தி விட முடியாது. முடிந்தால் அதிபர் புதினை தண்டித்து, போரை முடிவுக்கு கொண்ட வர டிரம்ப் முயற்சிக்க வேண்டும். உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவி வழங்கி, வெற்றி பெறச் செய்ய வேண்டும். மற்ற அனைத்து செயல்பாடுகளும் வெறும் தம்பட்டமாகவே முடியும்.
அமெரிக்காவுக்கு இந்தியா தேவை :
ஒரு உண்மையை டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா தேவை. இந்தியா உலகில் சுதந்திரமான நிலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்பின் வரி விதிப்புகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது,
இந்தியா-சீன நட்பு - டிரம்பே காரணம் :
சீனாவுடன் இந்தியா நெருக்கமாக கூடாது என்றால், நட்பு பாராட்டி இந்தியாவை அரவணைக்க வேண்டும். வரி விதிப்பு மிரட்டல்கள் இந்தியா - சீனா நட்பை வலுப்படுத்தும். இது அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதை கூட டிரம்பால் புரிந்து கொள்ள முடியவில்லை” இவ்வாறு ஜனநாயக கட்சி எம்பிக்கள் கடுமையாக சாடி உள்ளனர்.
============