ரஷ்யா - உக்ரைன் சண்டை :
Donald Trump on Russia Ukraine War : உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியை தழுவின. இதில் அமெரிக்கா பெரும் முனைப்பு காட்டி வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை எதிர்நோக்கி காத்திருக்கும், அதிபர் டிரம்ப், எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கி இருக்கிறார்.
டிரம்ப் - புதின் இன்று பேச்சுவார்த்தை :
இந்தநிலையில், ரஷ்ய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று சந்தித்து பேச இருக்கிறார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக அதிபர் புதின் அமெரிக்கா சென்றுள்ளார். அலாஸ்கா செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன்.
போரை புதின் முடிவுக்கு கொண்டு வருவார் :
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார். அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அலாஸ்காவில் புதினுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
மேலும் படிக்க : உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா ஆதரவு : ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதி
நான் இருந்திருந்தால்... :
உக்ரைனுக்கு அமெரிக்க பணம் வழங்கவில்லை. ஆனால், ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கியது போது அமெரிக்க அதிபராக நான் இருந்திருந்தால், போரே நடந்து இருக்காது.” இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
============