உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா ஆதரவு : ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதி

PM Modi on Russia Ukraine War Ceasefire: உக்ரைன் நாட்டில் அமைதி திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
PM Narendra Modi on Russia Ukraine War Ceasefire To President Volodymyr Zelenskyy
PM Narendra Modi on Russia Ukraine War Ceasefire To President Volodymyr Zelenskyy
1 min read

ரஷ்யா - உக்ரைன் போர் :

PM Modi on Russia Ukraine War Ceasefire : ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை முடிவுக்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அமைதி உடன்பாட்டிற்கு உக்ரைன் முன் வந்தாலும், அதை ஏற்க ரஷ்யா தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் பல நாடுகள் முயற்சி எடுத்தாலும், அமெரிக்காவும், அதிபர் டிரம்பும் மிகுந்து முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆகஸ்டு 15 - புதின்-டிரம்ப் பேச்சுவார்த்தை :

அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பும்(Vladimir Putin Donald Trump Meet) வரும் 15ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன்மூலம் போர் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : புதினை சந்திக்கிறார் டிரம்ப் : உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி!

மோடி - ஜெலன்ஸ்கி உரையாடல் :

இதனை வரவேற்பதாக இந்தியா அறிவித்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ”ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்(Russia Ukraine War) குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும், இந்த நெருக்கடியான சூழலில் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என அவர் உறுதியளித்தார்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : இந்தியாவின் வளர்ச்சி, ’S 500’ ஏவுகணை : அச்சத்தின் பிடியில் ட்ரம்ப்

இந்தியா முழு ஆதரவு - மோடி :

இதேபோல் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி(Narendra Modi Tweet), ”போரை விரைவாகவும் அமைதியான முறையிலும் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் குறித்த இந்தியாவின் விருப்பத்தை தெரிவித்தேன். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் எனவும் உறுதியளித்தேன்” என்று கூறியுள்ளார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in