President Trump announced that all types of imported trucks will be subject to 25% tariff from Nov 1st 
உலகம்

இறக்குமதி லாரிகளுக்கு 25% வரி : மீண்டும் அதிரடி காட்டும் டிரம்ப்

Donald Trump 25% US tariff on Truck Imports from November 1 : இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை லாரிகளுக்கும் நவம்பர் 1ம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Kannan

வணிகப் போர் தொடுக்கும் டிரம்ப்

Donald Trump 25% US tariff on Truck Imports from November 1 : அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு என்ற பெயரில் வணிக போர் தொடுத்து வருகிறார் டொனால்ட் டிரம்ப். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீது அவர் 50% வரி விதித்து இருக்கிறார். இதேபோன்று பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பை கடுமையாக்கி இருக்கிறார் டிரம்ப்.

லாரிகள் மீது 25% வரி விதிப்பு

இதற்கு உலக அளவில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தனது பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ளாத டிரம்ப், இறக்குமதி லாரிகளுக்கான வரி விதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அனைத்து லாரிகளுக்கும் வரி

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும். டெலிவரி லாரிகள், குப்பை லாரிகள், பொது பயன்பாட்டு லாரிகள், போக்குவரத்து மற்றும் பள்ளி பஸ்கள், டிராக்டர்-டிரெய்லர் லாரிகள், கனரக தொழில் வாகனங்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்குள் அடங்கும்.

மேலும் படிக்க : ’நோபல் பரிசு’ காத்திருக்கும் டிரம்ப் : இந்த ஆண்டு யாருக்கு..?

மெக்சிகோ, கனடாவுக்கு பாதிப்பு

மெக்சிகோ, கனடா நாடுகள் அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக உள்ளது. அதிபர் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் இந்த இரு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது. இந்த புதிய வரி விதிப்பால் இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என்று, பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

====