டாலர் vs பிரிக்ஸ் அமைப்பு :
Donald Trump on US Dollar Rate : உலக அளவில் நாடுகளுக்கு இடையேயான வணிகத்திற்கு அமெரிக்கா டாலர் மதிப்பே நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விற்பனை, தங்கம் விற்பனையிலும் அமெரிக்க டாலரின் மதிப்பே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தநிலையில், பிரிக்ஸ் நாடுகள்(BRICS Countries) அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு, தங்களுக்கென பொதுவான ஒரு நாணயத்தை கொண்டு வர திட்டமிட்டன. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு வரி விதிப்பு :
இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். வளர்ந்து வரும் பொருளாதார கூட்டமைப்பு வேகமாக மறைந்து வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின்(America Dollar Rate) உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. ஆனால், அதில் வெற்றிபெற முடியாது. அவர்கள் விரைவில் ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கும்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை :
எங்களுடன் விளையாட யாரையும் ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பிரிக்ஸ் அமைப்பினர் டாலரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பில் கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை.
மேலும் படிக்க : மாஸ்கோவை தாக்க முடியுமா?: ஜெலன்ஸ்கியை உசுப்பும் அதிபர் ட்ரம்ப்
ஈரானின் அணுசக்தி திறன் தகர்ப்பு :
நாங்கள் நிறைய போர்களை நிறுத்தினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.இவை அணு ஆயுத நாடுகள், அவை ஒன்றையொன்று மோதிக் கொண்டிருந்தன. சமீபத்தில் ஈரானில் நாம் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தபோது, அவர்களின் அணுசக்தித் திறனை நாங்கள் தகர்த்து, அதை முற்றிலுமாகத் தகர்த்துவிட்டோம். அதேசமயம், வர்த்தகத்தின் மூலம் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையை(India Pakistan Problem) தீர்த்து வைத்தோம். டாலரை மதிப்பை குறைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இதில் அமெரிக்கா எப்போதும் உறுதியாக இருக்கிறது” இவ்வாறு ட்ரம்ப்(Donald Trump Speech) பேட்டியளித்தார்.
===