
நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் :
Russia Ukraine War Update in Tamil : ரஷ்யா-உக்ரன் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருந்தாலும் ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சண்டையை கைவிடுவதாக இல்லை. இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி களம் இறங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்.
ரஷ்யா மீது கூடுதல் வரிகள் :
இதற்காக ரஷ்யா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ள ட்ரம்ப், 50 நாட்களுக்குள் போரை முடிவு கொண்டு வர வேண்டும் என்றும், இல்லா விட்டால் அமெரிக்காவின் வரி விதிப்புகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிபர் ஜெலன்ஸ்கியுடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டோனால்ட் டிரம்ப்(Donald Trump) பேசினார்.
மேலும் படிக்க : “உக்ரைன் போரை நிறுத்தா விட்டால்” : புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகள் :
போரின் தற்போதைய நிலை, உக்ரைனிடம் இருக்கும் ஆயுதங்கள் பற்றி விசாரித்த டோனால்ட் டிரம்ப், தேவைப்பட்டால் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அதிபர் விளாடிமிர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை(Ukraine Moscow Attack) தாக்க முடியுமா? என்றும் ஜெலன்ஸ்கியிடம் வினவினார். ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, தேவையான ஆயுதங்களை அமெரிக்கா அல்லது நேட்டோ நாடுகள்(NATO Countries) கொடுத்தால் எதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
சமாளிப்பாரா அதிபர் புதின் :
உக்ரன் போரில் அமெரிக்கா நுழைவது பெரும் சீரழிவக்கு வழிவகுக்கும் என்று ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நேட்டோ படைகள் களத்திற்கு வந்தாலும், ரஷ்யாவிடம் இருக்கும் நவீன ஆயுதங்கள், சீனாவின் மறைமுக ஆதரவு பெரும் தலைவலியாக மாறலாம். மாஸ்கோ மீது தாக்குதல்(Ukraine Moscow Attack) நடத்தினால், அதை கௌரவ பிரச்னையாக கருதி, அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களை கையாண்டால், உக்ரைன் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
=====