டிரம்ப் சிதறல் :
US President Donald Trump 100% Tariffs on China : அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உலக அளவில் பல வித விமர்சனங்களுக்கு கடந்த சில நாட்களாக ஆளாகி வருகிறார். மேலும்,தொடர்ந்து, உலக நாடுகளுக்கு வரி விதித்து மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை, குழப்பமடைய செய்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின் மீது இவர் விதித்துள்ள 50 சதவிகித வரி விதிப்பால் இந்தியா தனது சுயநாட்டு பொருள்களுக்கு முக்கிய துவம் கொடுத்து, வளர்ச்சிக்கான அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
நோபல் பரிசை எதிர்நோக்கிய டிரம்ப்
இதைத்தொடர்ந்து டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை எதிர்பார்த்து, 8 நாடுகளுக்குள் போரை நிறுத்தியதாக கூறி , தொடர்ந்து நோபல் பரிசு குறித்து பேசியும் உலக நாட்டு விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தார். இந்நிலையில், வெனிசுலாவை சேர்ந்த பொறியாளர் மற்றும் அரசியல்வாதியாக உள்ள மச்சோடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதனால், தனது அமைதியை துழைத்து, டிரம்ப புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
சீனாவிற்கு 100% வரிவிதிப்பு
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகித வரி விதித்தார். இதை தொடர்ந்து அமைதி நோபல் பரிசு கிடைக்காதது, வரி விதிப்பு உள்ளிட்ட பல வித குழப்பங்களுக்குள் ஆளாகியுள்ள டிரம்ப், இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு 100 சதவிகித வரி விதித்து சீனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
வரி விதிப்பு அடுத்து யாருக்கு ?
இந்தியாவின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்புக்கு, அவரது நாட்டு 21 எம்பிக்கள் இந்தியா உடனான உறவு மற்றும் வணிக தொடர்பான நம்பிக்கைளை எடுத்து கூறி வரிவிதிப்பை திரும்பி பெருமாறு கேட்டு கொண்டனர். இதைத்தொடர்ந்து, வருகிற நவம்பர் 1- ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்கப்படும் சீன பொருள்களுக்கு டிரம்ப் 100 சதவிகித வரியை உயர்த்தியுள்ளார்.
மேலும் படிக்க : ’எதுவும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு’ : அதிபர் டிரம்ப்
இவரின் தொடர் வரி விதிப்பால் அனைத்து நாடுகளும், குழப்பமடைந்து வரும் நிலையில், இவரின் அடுத்த வரி விதிப்பு நகர்வு எந்த நாட்டுக்கு இருக்கும் என்றும் பலர் புலம்பி வருகின்றனர்.