’எதுவும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு’ : அதிபர் டிரம்ப்

US President Donald Trump Criticize Barack Obama Win Nobel Peace Prize : எதுவுமே செய்யாத முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதாக டொனால்டு டிரம்ப் கிண்டல் அடித்துள்ளார்.
US President Donald Trump Criticize Barack Obama Win Nobel Peace Prize Awarded in Tamil
US President Donald Trump Criticize Barack Obama Win Nobel Peace Prize Awarded in Tamil
1 min read

2009ல் ஒபாமாவுக்கு நோபல் பரிசு :

US President Donald Trump Criticize Barack Obama Win Nobel Peace Prize : அமெரிக்காவில் நான்கு அதிபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. 2009ம் ஆண்டு அப்போது அதிபராக இருந்த பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2025 - அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. விருதுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்த போராடியதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்து இருக்கிறது. தங்கப் பதக்கத்துடன், ரூ.10 கோடி பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்படும்.

நோபல் பரிசு கிடைக்காமல் டிரம்ப் ஏமாற்றம்

8 போர்களை நிறுத்தி இருப்பதாகவும், இந்த ஆண்டு தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து பேசி வந்தார். எப்படியும் தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் காத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. போர்களை நிறுத்தியதாக கூறும் டிரம்பிற்கு அடுத்த ஆண்டு வேண்டுமானால் நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் படிக்க : ’அமைதிக்கான நோபல் பரிசு' நாளை அறிவிப்பு : காத்திருக்கும் டிரம்ப்

ஒபாமாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

இதனிடையே, முன்னாள் அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப், நோபல் பரிசு என்றால் என்ன என்றே தெரியாதவர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ அவர் (ஒபாமா) எதையுமே செய்யவில்லை. அவருக்கு பரிசு (நோபல்) கிடைத்திருக்கிறது. அந்த பரிசு என்னவென்று கூட அவருக்கு தெரியாது. நம் நாட்டை அழித்த அவரை தேர்ந்தெடுத்து, விருது கொடுத்தார்கள். அவர் ஒரு சிறந்த அதிபராக இருந்தது கிடையாது.நான் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு இப்படி நடந்ததே கிடையாது. என்னைப் போன்று யாரும் செயல்பட்டதும் கிடையாது “ இவ்வாறு டிரம்ப் பதிலளித்தார்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in