மூன்றாவது ஆண்டில் ரஷ்யா-உக்ரைன் சண்டை :
Vladimir Putin Donald Trump Meeting : ரஷ்யா - உக்ரைன் இடையே 2022ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைன் பக்கம் நிற்கும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டிற்கு ஆயுத சப்ளை, நிதியுதவி செய்தன. போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தாலும், ரஷ்யா அதை ஏற்கவில்லை(Russia Ukraine War). இந்தநிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு இறுதிக்கெடுவை விதித்தார் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப். அதன்படி செயல்படா விட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்து இருந்தார்.
போரை முடிக்க டிரம்ப் தீவிரம் :
உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் டோனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் முக்கிய கட்டமாக ரஷ்ய அதிபர் புடினை அவர் விரைவில் சந்திக்க உள்ளார், இந்த சந்திப்பு இறுதி செய்யப்பட்டு விட்டது, அதன்படி, ஆகஸ்டு 15ம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 15ல் டிரம்ப்-புதின் சந்திப்பு :
ஆகஸ்டு 15ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இதை உறுதிப்படுத்தி இருக்கும் டோனால்ட் டிரம்ப், ” அமெரிக்க அதிபராக இருக்கும் எனக்கும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையிலான மிகவும்(Vladimir Putin Donald Trump Relationship) எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று அலாஸ்காவில் நடைபெறுகிறது. நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு டிரம்ப் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க : இந்தியா வருகிறார் ’அதிபர் புதின்’ : டிரம்புக்கு அடுத்தடுத்து செக்
எதிர்பார்ப்பில் உலக நாடுகள் :
டிரம்ப், புதின் சந்தித்து உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வர்த்த உறவில் ஏற்பட்டு இருக்கும் விரிசல்களையும் களையும் எனத் தெரிகிறது. மேலும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால், தனிப்பட்ட முறையில் டிரம்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அது பார்க்கப்படும்.
=======