US President Donald Trump on Nobel Peace Prize Announcement : உலக அளவில் 8 போர்களை நிறுத்தி இருப்பதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அப்படி கொடுக்கா விட்டால், அது அமெரிக்காவுக்கே அவமானம் என்பது அவர் கூற்றாக உள்ளது.
’அமைதிக்கான அதிபர்’ டிரம்ப்
பல்வேறு துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை ( அக்டோபர் 10 ) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் உடன்பாடு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு , “அமைதிக்கான அதிபர்“ என அடைமொழியுடன் வெள்ளை மாளிகை பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
நாளை அமைதிக்கான நோபல் பரிசு
நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31ம் தேதி கடைசி நாளாகும். டிரம்ப் தான் நிறுத்தியதாக கூறும் சண்டைகள் எல்லாம், அதன் பிறகே நடைபெற்றன. எனவே, இந்த ஆண்டு அவருக்கு நோபல் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக டிரம்ப் அவநம்பிக்கை அடைந்து இருப்பதை அவர் பேட்டி வெளிப்படுத்தி இருக்கிறது.
கவலையில் அதிபர் டிரம்ப்
"ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்கு வழங்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்று அவர் கவலையுடன் சுட்டிக் காட்டினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "எனக்கு எதுவும் தெரியாது... மார்கோ (வெளியுறவுச் செயலாளர் ரூபியோ) 7 போர்களை நாங்கள் தீர்த்து வைத்தோம் என்று உங்களுக்குச் சொல்வார். 8வது போரை தீர்த்து வைக்க நாங்கள் நெருங்கி விட்டோம். ரஷ்யாவின் பிரச்னையை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நினைக்கிறேன்... வரலாற்றில் யாரும் இவ்வளவு போல் பிரச்னைகளை தீர்த்து வைத்ததில்லை என்று நினைக்கிறேன்," என்று பதிலளித்தார்.
மேலும் படிக்க : நோபல் பரிசை இழந்தாரா டிரம்ப்?அமைதி பரிசு கொடுத்த வெள்ளை மாளிகை!
நாளை தீர்ப்பு, காத்திருக்கும் டிரம்ப்
எனவே, நாளை கிடைக்கும் தீர்ப்பு அதாவது அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்து இருக்கிறது. நோபல் பரிசை பெற்று தனது நீண்ட நாள் கனவை டிரம்ப் நிறைவேற்றிக் கொள்வாரா? அல்லது அமைதிக்கான அதிபர் என்ற பட்டத்துடன் திரும்பி அடைவாரா? என்பது நாளை மாலை தெரிந்து விடும்.
===============