நோபல் பரிசை இழந்தாரா டிரம்ப்?அமைதி பரிசு கொடுத்த வெள்ளை மாளிகை!

The White House on Donald Trump Peace President : டிரம்ப்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நம்பிக்கையிழந்து பதில் கூறியதால், அண்மை புகைப்படத்தை பகிர்ந்து, டிரம்பிற்கு வெள்ளை மாளிகை கொடுத்த அமைதி பரிசு.
The White House on Donald Trump Peace President
The White House on Donald Trump Peace President
1 min read

நோபல் பரிசு அறிவிப்பு :

The White House on Donald Trump Peace President : இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, 6 பரிவுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மருத்துவத்தில் ஆரம்பமாகி பொருளாதாரத்தில் முடிவடையவுள்ளது. இதுவரை இந்த பரிசுகளை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் அமைதி பிரிவுக்கான நோபல் பரிசை தனக்கு வழங்குமாறு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

டிரம்ப்புக்கு நோபல் கிடையாது :

இந்நிலையில், டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என்று வியூகத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தி விட்டேன் என்று தொடர்ந்து டிரம்ப் மார்தட்டிக் கொண்டு வருகிறார். ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிப்பேன்’ என்று நம்பிக்கையிழந்து புலம்பவும் ஆரம்பித்து விட்டார்.

அமைதிக்கான டிரம்ப் :

வெள்ளை மாளிகையில் நிருபர் ஒருவர் டிரம்ப்பிடம், அமைதிக்கான நோபல் பரிசை நீங்கள் பெறுவதற்கான சாத்தியம் என்னவென்று கேட்க, அதற்கு டிரம்ப்(Donald Trump). “எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. மார்கோ ரூபியோவிடம் கேட்டால் நாங்கள் 7 போர்களை நிறுத்தியுள்ளோம் என்பதைச் சொல்வார். 8-வது போர் நிறுத்தத்துக்கு அருகில் வந்துவிட்டோம். ரஷ்யப் போரையும் விரைவில் நிறுத்துவோம். வரலாற்றில் இதுவரை இத்தனை போரை நிறுத்தியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனினும், நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும் ” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை கொடுத்த அமைதி பட்டம்

வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President) என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது. நோபல் கிடைக்காததற்கான காரணங்களை நார்வேஜியன் கண்டுபிடிக்கும் என்று நம்பிக்கையிழந்துள்ள டிரம்ப்புக்கு இதன் காரணமாகவே ’அமைதி அதிபர் டிரம்ப்’ என்று வெள்ளி மாளிகை நம்பிக்கை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க : ’நோபல் பரிசு’ காத்திருக்கும் டிரம்ப் : இந்த ஆண்டு யாருக்கு..?

டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்திலும் அவர் அமைதிக்கான நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அது அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அவரது முதல் பதவிக்காலத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசு(Nobel Peace Prize To Barack Obama) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in